ஆர்.பிரசன்னா
திருப்புறம்பியம் பிரளயங்காத்த விநாயகருக்கு விநாயகர் சதுர்த்தியன்று மட்டும் ஒரு குடம் தேன் அபிஷேகம் செய்கிறார்கள்.
ஜப்பான் நாட்டில் வயது முதிர்ந்த ஆணும் பெண்ணும் ஆரத்தழுவிக் கொண்டிருப்பதை போல உருவம் கொண்ட விநாயகர் சிலைகள் ஆங்காங்கே காணப்படுகின்றன. இந்த இரு விநாயகர்களையும் வழிபட்டால் நீண்ட காலங்கள் வாழலாம் என்று நம்புகின்றனர்.
திருவண்ணாமலை ஆலயச் சுவரில் வீற்றிருக்கும் ஒரு ஜான் உயரமே கொண்ட விநாயகருக்கு 'ஆயிரம் யானை திரை கொண்ட விநாயகர்' என்று பெயர்.
திருவையாற்றில் ஒரு சமையம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதை மக்களுக்கு உணர்த்த, விநாயகர் நள்ளிரவில் ஓலமிட்டு, ஊர்மக்களைக் காப்பாற்றினார். அதனால் இவருக்கு ஓலமிட்ட விநாயகர் என்ற பெயர் ஏற்பட்டது.
ஆடுதுறைக்கு அருகேயுள்ள ஊர் மருத்துவக்குடி. இங்கு உள்ள ஆலயத்தில் தேள் போன்ற வடிவமைப்பில் விருச்சிகப் பிள்ளையாராக அருள்கிறார்.
கேரள மாநிலத்தில் உள்ள மல்லியூர் திருத்தலத்தில் விநாயகர் உண்ணிக்கண்ணன் என்ற திருநாமம் பூண்ட கண்ணனை தனது இடது மடியில் அமர்த்திய நிலையில் தரிசனமளிப்பது வித்தியாசமான ஒன்றாகும்.
திருச்சி உச்சிப்பிள்ளையாரை வழிபட்டு வலம் வரும் போது, ஏழாவதாக இருக்கும் பிள்ளையார், ஏழாப்பிள்ளையார் என அழைத்து காலப்போக்கில் மருவி ஏழைப்பிள்ளையார் என்றானது. இவர் சன்னதியில் இசைக்கலைஞர்கள் வணங்கினால் குரல் வளம் நீடித்திருக்கும் என்பது ஐதீகம்.
மதுரை சுந்தரேஸ்வரர் கோவிலில் விநாயகர் புலிக்கால்களுடன் காட்சி தருகிறார்.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் தலையாட்டி விநாயகர் உள்ளார்.
விருதுநகர் அருகே உள்ள திருச்சுழி சிவன் கோவிலில் தூணில் விநாயகரை தரிசிக்கலாம்.
நாகர்கோவில் வடிவீஸ்வரம் கோவிலில் வீணை ஏந்திய கோலத்தில் விநாயகர் அருள்கிறார்.
திருநெல்வேலியை அடுத்த வாசுதேவநல்லூர் கோவிலில் வாள், கோடாரி தாங்கி விநாயகர் வீற்றிருக்கிறார்.