நான்சி மலர்
சாதாரண குளிர்ந்த தண்ணீரை காட்டிலும் சுடுத்தண்ணீர் விரைவில் உறைந்து ஐஸ் கட்டியாக மாறும் தன்மையைக் கொண்டிருப்பதாக கண்டுப்பிடித்துள்ளனர்.
மோனலிசா ஓவியத்தை நன்றாக கவனித்து பார்த்தால் தெரியும் அவருக்கு புருவம் இருக்காது. இதற்கு காரணம் அந்த ஓவியத்தை சுத்தப்படுத்தும் போது காலப்போக்கில் அது அழிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.
எறும்புகளும் ஓய்வெடுக்கும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? எறும்புகள் தொடர்ந்து 12 மணி நேரம் உழைத்த பிறகு 8 நிமிடங்கள் ஓய்வெடுக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுப்பிடித்துள்ளனர்!
ஆங்கில மொழியில் 'I am' என்ற வார்த்தை முழுமையாக நிறைவடைந்த வாக்கியமாக கருதப்படுகிறது.
மனிதனின் கண் கருவிழி பிறப்பு முதல் இறப்பு வரை ஒரே அளவில்தான் இருக்கும். மற்ற உடல் உறுப்புகள் வளரும். ஆனால், கண் கருவிழி மட்டும் வளருவதில்லை.
'மொஹமத்' என்ற பெயர் தான் உலகத்திலேயே பெரும்பாலான நபர்களுக்கு வைக்கப்பட்டிருக்கும் பெயர் என்று சொல்லப்படுகிறது. இதுவரை 150 மில்லியன் ஆண்களுக்கு வைக்கப்பட்டிருக்கிறதாம்.
ஓட்டகத்திற்கு மூன்று கண் இமைகள் இருக்கின்றன. பாலைவனத்தில் இருக்கும் ஒட்டகத்தின் கண்களை மணல் காற்றில் இருந்து பாதுக்காக்க இயற்கையாகவே அமைந்திருக்கிறது.
நாம் இரவில் பார்க்கும் நட்சத்திரங்கள் மற்றும் கோள்கள் பல மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளன. எனவே, நாம் பார்ப்பது அதன் கடந்த காலத்தை!
தேனீக்கள் புதிதாகக் கண்டுபிடித்த உணவு அல்லது மகரந்தத்தின் இருப்பிடத்தை மற்ற தேனீக்களுக்குத் தெரிவிக்க, Waggle Dance பயன்படுத்துகின்றன.
ஒரு பூனைக்கு ஒவ்வொரு காதிலும் சுமார் 32 தசைகள் உள்ளன. இதனால் பூனைகள் தங்கள் காதுகளை 180 டிகிரிக்குச் சுழற்றி, சத்தம் எங்கிருந்து வருகிறது என்பதை துல்லியமாகக் கண்டுபிடிக்க முடியும்.