நான்சி மலர்
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் புகழ்பெற்ற பொன்மொழிகளையும், (10 quotes of Sachin Tendulkar) அவற்றின் ஆழமான அர்த்தங்களையும் விரிவாகக் காணலாம்.
உன் கனவுகளைத் துரத்துவதை நிறுத்திவிடாதே, ஏனென்றால் கனவுகள் ஒருநாள் நிஜமாகும்.
இந்தியாவிற்காக விளையாட வேண்டும் என்பது எப்போதும் எனது கனவாகவே இருந்தது, ஆனால் அந்த எண்ணம் ஒருபோதும் என் மீது அழுத்தத்தை உண்டாக்க நான் அனுமதித்ததில்லை.
என் மனதில் இருந்த ஒரே விஷயம், 'ஒரு நாள் நான் இந்தியாவிற்காக விளையாட வேண்டும்' என்பதுதான்; அந்த நாள் நிச்சயம் வரும் என்பதில் நான் மிகுந்த உறுதியாகவும், நம்பிக்கையுடனும் இருந்தேன்.
அந்தப் பயணத்தின்போது உங்கள் மீது சில கற்கள் வீசப்படலாம்; நீங்கள் அந்த கற்களையே உங்கள் வெற்றிப் பயணத்தின் மைல்கற்களாக மாற்றிக்கொள்ளுங்கள்.
நான் சில நேரங்களில் தோற்கிறேன், சில நேரங்களில் வெற்றி பெறுகிறேன், அது நியாயமானதுதான். இவை இரண்டும் சேர்ந்ததுதான் வாழ்க்கை.
நீங்கள் எந்த உயரத்தை அடைந்தாலும் சரி, உங்களை நீங்கள் மெருகேற்றிக் கொள்வது ஒருபோதும் நின்றுவிடக் கூடாது. களமிறங்குங்கள், உங்கள் முந்தைய சாதனைகளை நீங்களே முறியடியுங்கள்!
களத்தில் இருக்கும் எந்தவொரு விளையாட்டு வீரரும் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்; நீங்கள் எப்போதும் சரியான மனநிலையில் இருப்பது மிகவும் அவசியம்.
ஒரு பந்திற்கு எதிர்வினையாற்ற எனக்கு 0.5 வினாடிகள் மட்டுமே கிடைக்கும், சில நேரங்களில் அதைவிடக் குறைவான நேரம் மட்டுமே கிடைக்கும்.
நான் கிரிக்கெட்டின் கடவுள் அல்ல. நான் தவறுகள் செய்வேன், ஆனால் கடவுள் தவறுகள் செய்வதில்லை.
எனக்குத் தோல்வி என்றால் பிடிக்காது. கிரிக்கெட்தான் எனது முதல் காதல்; நான் மைதானத்திற்குள் நுழைந்துவிட்டாலே ஒரு தனி உலகிற்குள் சென்றுவிடுவேன். அங்கு ஜெயிக்க வேண்டும் என்கிற தாகம் என்னிடம் எப்போதும் இருக்கும்.