நான்சி மலர்
யோகா என்பது வெறும் உடல் பயிற்சியல்ல; அது ஒரு வாழ்க்கை முறை. யோகா என்பது உடல், மனம் மற்றும் ஆன்மா ஆகிய மூன்றையும் ஒருங்கிணைக்கும் ஒரு பாரம்பரிய இந்தியக் கலை ஆகும்.
யோகா தொடர்ந்து செய்வதால் உடலின் நெகிழ்வுத்தன்மையும், வலிமையும் அதிகரிக்கும். நம் உடலின் சமநிலையை மேம்படுத்தும்.
மூச்சுப்பயிற்சி மற்றும் தியானம் போன்ற யோகா செய்வதால் மனம் ரிலாக்ஸாக மாறும். இதனால் மனஅழுத்தம் மற்றும் பதற்றம் குறையும்.
யோகா உடலின் எடையைப் பயன்படுத்திச் செய்யப்படுவதால், தசைகள் வலுவடைகின்றன. இது எலும்புகளின் பாதுகாப்பிற்கும் உதவுகிறது.
சூர்ய நமஸ்காரம் போன்ற ஆசனங்கள் கலோரிகளை எரிக்க உதவுகின்றன. மேலும், யோகா உடலில் உள்ள வளர்சிதை மாற்றத்தை சீராக்கி உடல் எடையைக் குறைக்கிறது.
தியானம் மற்றும் மூச்சுப்பயிற்சிகள் மூளையின் செயல்பாட்டைத் தூண்டி ஞாபக சக்தியை அதிகரிக்கவும் உதவுகின்றன.
உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற யோகா உதவுகிறது. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.
நன்றாக மூச்சை இழுத்து விட்டு யோகா செய்வது சுவாசத்தையும், நுரையீரல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். மேலும், ஆஸ்துமா மற்றும் பிற சுவாசப் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.
யோகா நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்துவதால், தூக்கமின்மை பிரச்னை நீங்கி ஆழ்ந்த உறக்கம் கிடைக்கிறது.
முதுகுவலி, தலைவலி போன்ற நாள்பட்ட வலிகள் யோகா செய்வதால் குறையும்.