கிரி கணபதி
மத்தவங்க தப்பா நினைச்சுடுவாங்களோ, அல்லது கிண்டல் பண்ணுவாங்களோன்னு பயந்து ஆண்கள் மறைக்கிற 10 முக்கியமான விஷயங்களை இங்கே பார்க்கலாம்.
1. ஆண்கள் மறைக்கிற முதல் விஷயம் அவங்களோட அழுகைதான். எவ்ளோ பெரிய கஷ்டம் வந்தாலும், "நான் ஸ்ட்ராங்"னு காட்டிக்கிறதுக்காக அழுகையை அடக்கிப்பாங்க. தனியா இருக்கும்போதுதான் அவங்க கண்ணீர் விடுவாங்க.
2. குடும்பத்த காப்பாத்த வேண்டிய பொறுப்பு அவங்களுக்கு இருக்கறதால, தங்களுக்கு இருக்கிற கடன் தொல்லைகளையோ, பணக் கஷ்டத்தையோ வீட்ல சொல்ல பயப்படுவாங்க. "சம்பாதிக்கத் தெரியாதவன்"னு பேரு வந்துடுமோன்னு ஒரு பயம்.
3. பெண்கள் மட்டுமில்ல, ஆண்களுக்கும் தங்கள் உடல் தோற்றம் பத்தி கவலைகள் உண்டு. முடி கொட்டுறது, தொப்பை போடுறது, உயரம் குறைவா இருக்கறதுன்னு பல விஷயங்களை நினைச்சு உள்ளுக்குள்ள வருத்தப்படுவாங்க.
4. பூச்சி, இருட்டு, உயரம்னு சின்ன சின்ன விஷயங்களுக்கு பயப்படுறது ஆண்களுக்கும் இயல்புதான். ஆனா, இத வெளிய சொன்னா "பயந்தாங்கொள்ளினு" கிண்டல் பண்ணுவாங்களேன்னு, பயமே இல்லாத மாதிரி நடிப்பாங்க.
5. வேலையிலயோ, பிசினஸ்லயோ ஏற்படுற தோல்விகளை ஒத்துக்க ஆண்கள் ரொம்ப தயங்குவாங்க. சமூகம் வெற்றியை மட்டுமே கொண்டாடுறதால, தோல்வி அடைஞ்சா தனக்கு மரியாதை குறைஞ்சுடும்னு நினைப்பாங்க.
6. வழி தெரியலனா கூட கூகுள் மேப் பாக்காம சுத்துவாங்களே தவிர, யார்ட்டயும் வழி கேட்க மாட்டாங்க. உதவி கேட்டா, அது தன்னோட திறமையின்மையைக் காட்டுற மாதிரி ஆயிடும்னு ஒரு ஈகோ கலந்த பயம் இருக்கும்.
7. ஆண்களுக்கும் சின்ன சின்ன பாராட்டுகள் பிடிக்கும். "நீ அழகா இருக்க", "நல்லா டிரஸ் பண்ணியிருக்க"ன்னு யாராவது சொன்னா உள்ளுக்குள்ள குதிப்பாங்க.
8. ரொமான்டிக் படங்கள் பார்க்குறது, கார்ட்டூன் பார்க்குறது, சமையல் செய்யுறது, செல்லப் பிராணிகள் கிட்ட கொஞ்சி பேசுறது - இதெல்லாம் ஆண்களுக்கும் பிடிக்கும்.
9. மன அழுத்தம், பதட்டம் இதெல்லாம் ஆண்களுக்கும் வரும். ஆனா, இத பத்தி பேசுனா பைத்தியம்னு முத்திரை குத்திடுவாங்களோ, அல்லது பலவீனமானவன்னு நினைப்பாங்களோன்னு பயந்து டாக்டர்கிட்ட கூட போக மாட்டாங்க.
10. தன்னோட காதலி அல்லது மனைவிகிட்ட இருக்கிற பிரச்சனைகளை, நண்பர்கள்கிட்ட கூட ஷேர் பண்ண மாட்டாங்க. ஏன்னா, தான் ஒரு தோல்வியடைந்த காதலனாவோ அல்லது கணவனாவோ தெரிஞ்சுடக் கூடாதுன்னு நினைப்பாங்க.