மனசை 'டீப் கிளீன்' பண்ண இந்த 10 வழிகளை ட்ரை பண்ணுங்க!

கிரி கணபதி

நாம் வீட்டைச் சுத்தமாக வைத்திருப்பது போல, மனதையும் அவ்வப்போது 'டீப் கிளீன்' செய்வது மிக அவசியம். ஓவர் திங்கிங் மற்றும் தேவையற்ற கவலைகளை விரட்டி, மனதைப் புத்துணர்ச்சியாக மாற்றும் 10 சிறந்த வழிகளை இங்கே பார்ப்போம்.

clean your mind

1. (Be Mindful): கடந்த காலக் கவலைகளையும் எதிர்காலப் பயத்தையும் மூட்டைகட்டி வையுங்கள். நடக்கும் இந்த நொடியை முழுமையாக உணர்ந்து வாழ்வது மனதிற்குப் பெரும் நிம்மதியைத் தரும்.

clean your mind

2. (Start Writing): உங்கள் மனதில் ஓடும் குழப்பங்களை ஒரு பேப்பரில் தெளிவாக எழுதிப் பாருங்கள். இது மூளையில் உள்ள தேவையற்ற குப்பைகளை உடனடியாக வெளியேற்றும் சிறந்த சைக்காலஜி ட்ரிக் ஆகும்.

clean your mind

3. (Morning Calm): காலை 5:00 மணிக்கு எழுந்து ஒரு பத்து நிமிடம் எந்த சிந்தனையும் இன்றி அமைதியாக அமர்ந்திருங்கள். இது அன்றைய நாள் முழுவதற்கும் தேவையான பாசிட்டிவ் எனர்ஜியை உங்கள் மூளைக்குக் கொடுக்கும்.

clean your mind

4. (Put on Music): உங்களுக்குப் பிடித்த இனிமையான பாடல்களைக் கண்களை மூடிக்கொண்டு ரசித்துக் கேளுங்கள். நல்ல இசைக்கு எப்பேர்ப்பட்ட மன அழுத்தத்தையும் சில நிமிடங்களில் குறைக்கும் மேஜிக் சக்தி உண்டு.

clean your mind

5. (Get Some Sleep): மனச்சோர்வு ஏற்படும்போது எந்த யோசனையும் இல்லாமல் நிம்மதியாகத் தூங்குங்கள். ஒரு நல்ல தூக்கம் மூளையின் செல்களைப் புதுப்பித்து உங்களை ஃப்ரெஷ்ஷாக மாற்றும்.

clean your mind

6. (Take a Walk): மாலை 5:00 மணி அளவில் உங்கள் வீட்டின் அருகிலோ அல்லது பூங்காவிலோ ஒரு சின்ன வாக்கிங் செல்லுங்கள். இயற்கையான காற்றும் சூழலும் உங்கள் மனதின் பாரத்தை மாயமாக இறக்கிவிடும்.

clean your mind

7. (Tidy Up): உங்கள் வேலை செய்யும் டேபிளை அல்லது படுக்கை அறையை நேர்த்தியாகச் சுத்தப்படுத்துங்கள். வெளிச்சூழ்நிலை சுத்தமாக இருந்தாலே உங்கள் உள்மனதும் தானாகவே சுறுசுறுப்பாக மாறிவிடும்.

clean your mind

8. (Unfocus): தொடர்ந்து வேலை செய்து மூளை சோர்வடையும்போது கொஞ்ச நேரம் எதைப் பற்றியும் சிந்திக்காமல் சும்மா இருங்கள். இந்தச் சிறு இடைவெளி உங்கள் சிந்தனைத் திறனைப் பல மடங்கு கூர்மையாக்கும்.

clean your mind

9. (Talk About It): உங்களின் கவலைகளை உற்று கவனிக்கும் நபர்களிடம் மனம் திறந்து பேசுங்கள். நமது பிரச்சனைகளை மற்றவர்களிடம் பகிரும்போது அதன் வீரியம் பாதியாகக் குறைந்துவிடும்.

clean your mind

10. (Digital Break): எந்நேரமும் மொபைலை நோண்டிக்கொண்டிருக்காமல், சில மணி நேரங்கள் இன்டர்நெட்டை ஆஃப் செய்து வையுங்கள். இந்த டிஜிட்டல் பிரேக் மூளையின் ஓவர் திங்கிங் பழக்கத்தை உடனடியாக நிறுத்திவிடும்.

clean your mind

நம் மனது ஒரு அழகான தோட்டம் போன்றது; அதில் தேவையற்ற நெகட்டிவ் எண்ணங்கள் என்ற களைகளை வளர விடாதீர்கள். இந்த 10 எளிய வழிகளைத் தொடர்ந்து பின்பற்றி, என்றும் புத்துணர்ச்சியுடனும் மகிழ்ச்சியுடனும் வாழுங்கள்.

clean your mind
Clean-Mind-Environment
மனசும் வீடும் குப்பையா இருக்கா? இரண்டையும் சுத்தம் செய்ய இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க!