பாரதி
தேர்வு எழுதும் மாணவர்கள் எவ்வளவு விழுந்து விழுந்து படித்தாலும் சரியான நேரத்தில் அவர்களை ஊக்குவிப்பது அவசியம். அந்தவகையில் மாணவர்களுக்கான 15 பொன்மொழிகளைப் பார்ப்போம்.
தைரியம் பயத்தைவிட ஒரு படி மேலே உள்ளது.
செய்ய முடிந்தவன் சாதிக்கிறான், செய்ய முடியாதவன் போதிக்கிறான்.
இன்று நீங்கள் உணரும் வலி நாளை நீங்கள் உணரும் பலமாக இருக்கும்.
நம்பிக்கை வெற்றியோடு வரும், ஆனால், வெற்றி நம்பிக்கை உள்ளோரிடம் மட்டுமே வரும்.
ஒவ்வொரு சிறிய மாற்றமும், பெரிய வெற்றியின் ஒரு பகுதியாகும்.
உங்களால் பறக்க முடியாவிட்டால் ஓடுங்கள்.
நீ இன்று செய்யும் சின்ன சின்ன முயற்சிகள் நாளை மாறும் வெற்றியின் ஆணி வேர்கள்.
நம்மீது நம்பிக்கை நமக்கிருக்கும் வரை வாழ்க்கை நம்வசம்.
நீங்களே கட்டியெழுப்பும் சுவர்களால் மட்டுமே நீங்கள் அடைக்கப்பட்டுள்ளீர்கள்.
உன் திறமையை வெளிகாட்டு, உலகம் உன்னை கண்டறியும்.
கற்றவர்களிடம் கற்பதைவிட கற்றுக்கொண்டிருப்பவர்களிடம் கற்றுக்கொள்.
விதைத்தவன் உறங்கலாம். ஆனால், விதைகள் ஒருபோதும் உறங்குவதில்லை.
பெரிய வேலையைச் செய்வதற்கான ஒரே வழி, நீங்கள் செய்வதை நேசிப்பதே.
நம் வாழ்வில் எல்லாம் ஒரு நாள் மாறும். ஆனால் ஒரே நாளில் மாறிவிடாது.
நீங்கள் முயற்சியை கைவிடாதவரை, வெற்றியும் உங்களை கைவிடாது.