புவனா நாகராஜன்
1/12. தமிழ்ப்புத்தாண்டு பராபவ 14.4.2026ல் மலர்ந்துள்ளது. அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டில் புத்தாண்டு பிரதிக்ஞை மேற்கொள்வோம்.
2/12. இறைவன் மிகப்பொியவன் என்பதை உணர்ந்து நல்ல எண்ணங்களுடன் வாழ்வோம்.!
3/12. எந்த தருணத்திலும் பொய் பேசாமல் வாழ பழகிக்கொள்ளுவோம்!
4/12. மனசாட்சி கடைபிடித்து அதை கெடுக்காமல் வாழ சபதம் செய்வோம்!
5/12. ஏழை எளியவர்கள் பசிப்பிணி போக்க நம்மால் முடிந்த உதவியை மேற்கொள்ளுவோம்!
6/12. பெற்ற தாய் தந்தையரை தெய்வமாய் நினைத்து போற்றி மகிழ்வோம்!
7/12. எந்த தருணத்திலும் தாய் தந்தையரை முதியோா் இல்லத்தில் சோ்க்கமாட்டோம் என சபதம் செய்வோம்!
8/12. அனைவருக்கும் அனைத்தும் கிடைத்திட முடிந்த அளவு முயற்சி செய்வோம்!
9/12. வரவுக்கு மீறிய செலவை மேற்கொள்ளாமல் கடன் வாங்காமல் வாழ பழகிக் கொள்ளுவோம்!
10/12. கணவன் மனைவி இருவரும் பரஸ்பரம் அன்பு காட்டி சந்தோஷமாக வாழ சபதம் மேற்கொள்வோம் !
11/12. வாழ்ந்து கெட்டவர்களை உதாசீனம் செய்யாதிருப்போம்.
12/12. பெண்மையை போற்றுவோம் அவர்களுக்கு துன்பம் வராமல் இருக்க பல வகையிலும் உறுதுணையாய் இருப்போம்!