வாழ்க்கையை மாற்றும் A to Z சூத்திரம் - வெற்றிக்கான ஒரே வழி இதுதான்!

எஸ்.மாரிமுத்து

'A' முதல் 'Z' வரை உள்ள ஆங்கில எழுத்துக்களுக்கு இணையான தமிழ் உத்வேகச் சொற்கள் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

Alphabets motivation

A - Appreciation மற்றவர்களின் நிறைகளை மனதாரப் பாராட்டுங்கள்.

B - Behaviour புன்முறுவல்காட்டவும் சிற்சில அன்புச் சொற்களை சொல்லவும் கூட நேரம் இல்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்.

Appreciation and Behaviour

C-Compromise அற்ப விஷயங்களை பெரிதுபடுத்தாதீர்கள். மனம் திறந்து பேசி சுமூகமாக தீர்த்துக் கொள்ளுங்கள்.

D-Depression மற்றவர்கள்  நம்மை புரிந்து கொள்ளவில்லையே என்று சோர்வடையாதீர்கள்.

Compromise and Depression

E- Ego மற்றவர்களை விட உங்களை உயர்வாக நினைத்துக் கொண்டு கர்வப்படாதீர்கள்.

F-Forgive கண்டிக்கக் கூடிய அதிகாரமும், நியாயமும் உங்கள் பக்கம் இருந்தாலும் எதிர் தரப்பினரை மன்னிக்க வழி இருக்கிறதா என்று பாருங்கள்.

Ego and Forgive

G- Genuineness எந்த விஷயத்தையும் நேர்மையாக கையாளுங்கள்.

H-Honesty தவறு செய்தால் உடனே மன்னிப்பு கேட்பதை கௌரவமாக கருதுங்கள்.

Genuineness and Honesty

I - Inferiority complex எவரையும் பார்த்து பிரமிக்காதீர்கள். "நான் ஏன் இப்படி இருக்கிறேன்" என்ற தாழ்வு மனப்பான்மையை விடுங்கள்.

J- Jealousy பொறாமை வேண்டவே வேண்டாம். அது கொண்டவனை கொல்லும்.

Inferiority complex and Jealousy

K-Kindness இனிய இதமான சொற்களை மட்டுமே பயன்படுத்துங்கள்.

L- Loose Talk சம்பந்தமில்லாமலும், அர்த்தமில்லாமலும், பின் விளைவு அறியாமலும் பேச வேண்டாம்.

Kindness and Loose talk

M - Misunderstanding மற்றவர்களை தவறாக புரிந்து கொள்ளாதீர்கள்.

N - Neutral எப்போதும் எந்த விஷயத்தையும் முடிவெடுத்து விட்டு பேச வேண்டாம். பேசிவிட்டு முடிவு எடுங்கள். நடுநிலை தவறாதீர்கள்.

Misunderstanding and Neutral

O- Over Expectation அளவுக்கு அதிகமாக எதிர்பார்ப்பு வைக்காதீர்கள். தேவைக்கு அதிகமாக ஆசைப் படாதீர்கள்.

P-Patience சில சங்கடங்களை சகித்து தான் ஆக வேண்டும் என உணருங்கள்.

Overexpectation and patience

Q-Quietness தெரிந்ததை மாத்திரமே பேசுங்கள். அநேக பிரச்சினைகளுக்கு காரணம் தெரியாததை பேசுவது தான். கூடுமானவரை பேசாமலே இருந்து விடுங்கள்.

R - Roughness பண்பில்லாத வார்த்தைகளையும் தேவையில்லாத மிடுக்கையும் காட்டாதீர்கள்.

Quietness and Roughness

S-Stubbornness சொன்னதே சரி! செய்ததே சரி! என்ன பிடிவாதம் பிடிக்காதீர்கள்.

T- Twisting இங்கே கேட்டதை, அங்கேயும் அங்கே கேட்டதை, இங்கேயும் சொல்வதை விடுங்கள்.

Stubbornness and Twisting

U - Underestimate யாரையும் எதையும் குறைவாக எடைபோடாதீர்கள்.மற்றவர்களுக்கும் மரியாதை உண்டு என்பதை மறவாதீர்கள்.

V- voluntary அடுத்தவர் இறங்கி வர வேண்டும் என்று காத்திராமல் நீங்களே பேச்சை முதலில் தொடங்குங்கள்.

Underestimate and Voluntary

W - Wound எந்தப் பேச்சும் செயலும் யார் மனதையும் காயப்படுத்தாமல் இருக்கட்டும்.

X - Xerox நம்மை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ, அப்படியே மற்றவர்களை நாம் நடத்துவோம்.

Wound and Xerox

Y - Yield முடிந்தவரை விட்டுக் கொடுங்கள். விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை. கெட்டுப் போகிறவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை.

Z- Zero இந்த 26 எழுத்துக்கள் அனைத்தையும் கடைபிடித்தால் பிரச்னை என்பது பூஜ்ஜியம் ஆகும்!

Yield and Zero
Shahrukh khan
ஷாருக்கான் கற்றுத்தரும் 'ஜீரோ டு ஹீரோ' மந்திரங்கள்!