எஸ்.மாரிமுத்து
1. அழகைப் பற்றி கனவு காணாதீர்கள்; அது உங்கள் கடமையை பாழாக்கி விடும். கடமையைப் பற்றி கனவு காணுங்கள். அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும் !
2. கடின உழைப்பு நேர்மைக்கு மாற்று எதுவும் இல்லை; நிச்சயம் எதுவும் இல்லை!
3. நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை. நீ எண்ணுவது விண் மீனாக இருந்தாலும் உன் உழைப்பால் அது உன் கை வந்து சேரும்!
4. கனவு காணுங்கள்! கனவு என்பது தூக்கத்தில் வருவது அல்ல, உங்களை தூங்கவிடாமல் எது செய்கிறதோ அதுதான் கனவு!
5. நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதும் மண்டியிடுவதில்லை!
6. கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே, அது உன்னைக் கொன்றுவிடும். கண்ணை திறந்து பார் நீ அதனை வென்றுவிடலாம்.
7. நம்பிக்கை மற்றும் கடின உழைப்பு இரண்டும் தோல்வி எனும் நோயைக்கொல்ல சிறந்த மருந்து. இது உங்களை ஒரு வெற்றிகரமான நபராக மாற்றும்!
8. நீங்கள் சூரியனைப் போலப் பிரகாசிக்க வேண்டுமானால் முதலில் சூரியனை போல எரிய வேண்டும்!
9. தோல்விகளை எதிர்கொள்ள கற்றுக்கொள்ளுங்கள்.
அதுதான் வெற்றிக்கான மிக முக்கியமான திறமை!
10. உங்களுக்கு சிறகுகள் உள்ளன. தவழ்ந்து செல்லாதீர்கள். அதைக் கொண்டு மேலே மேலே பறந்து செல்லுங்கள்!