எஸ்.மாரிமுத்து
நெல்சன் மண்டேலா பொன் மொழிகள்:
1/11. ஒரு காரியம் செய்து முடிக்கும் வரை, அது எப்போதும் சாத்தியமற்றதாக போலத்தான் இருக்கும்.
2/11. வாழ்க்கையில் நாம் வாழ்ந்தோம் என்பது மட்டும் முக்கியமல்ல. மற்றவர்களின் வாழ்வில் நாம் ஏற்படுத்திய மாற்றமே நாம் வாழும் வாழ்க்கையின் முக்கியத்துவத்தைத் தீர்மானிக்கும்.
3/11. உலகை மாற்றுவதற்கு நீங்கள் பயன்படுத்தக்கூடிய மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதம் கல்வி ஆகும்.
4/11. வெற்றியாளர் என்பவர் ஒருபோதும் கைவிடாத கனவு காண்பவர்.
5/11. ஒரு பெறும் மலையில் ஏறிய பிறகு ஏறுவதற்கு இன்னும் பல மலைகள் இருக்கின்றன என்பது அப்போது புலப்படும்.
6/11. தைரியம் என்பது பயம் இல்லாத நிலை அல்ல. அது மற்றவர்களை பயத்தைக் கடந்து செல்ல தூண்டுவதாகும்.
7/11. நான் ஒரு நம்பிக்கையாளர் அல்ல - ஆனால் நம்பிக்கையின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவன்.
8/11. வெற்றிக்கு நீங்கள் எங்கிருந்து தொடங்குகிறீர்கள் என்பதல்ல மாறாக எவ்வளவு உயர்வாக இலக்கு வைக்கிறீர்கள் என்பதே முக்கியம்.
9/11. வளர்ச்சிக்கு ஒருவர் கொண்டிருக்கக்கூடிய மாபெரும் ஆயுதம் அமைதிதான்.
10/11. வீரன் என்பவன் பயமில்லாதவன் அல்ல, அவன் தன் பயங்களை வெல்பவனே!
11/11. வாழ்வில் மாபெரும் பெருமை என்பது ஒரு போதும் வீழ்ந்து விடாமல் இருப்பதில் இல்லை. மாறாக ஒவ்வொரு முறை வீழும் போதும் எழுந்து நிற்பதில் தான் உள்ளது.