எம். ஆர். ஆனந்த்
பெஞ்சமின் பிராங்கிளின் என்பவரை பற்றி தெரியாதவர்களே கிடையாது என்று சொல்லலாம். அவர் ஒரு எழுத்தாளர் பேச்சாளர் கண்டுபிடிப்பாளர். இன்னும் எத்தனையோ திறமைகளை பெற்றவர். இவரை அமெரிக்காவின் முதல் குடிமகன் என்று அழைத்தனர்.. இவருடைய மேற்கோள்கள் சில,
“Love your Enemies, for they tell you your Faults.”
எதிரிகளை நேசியுங்கள், அவர்கள் தான் உங்களிடம் உள்ள குறைகளை சுட்டிக் காட்டுவார்கள்
“He that falls in love with himself will have no rivals.”
தங்களை தாங்களே காதலிப்பவர்களுக்கு போட்டியாக யாரும் வரமாட்டார்கள்.
“There never was a good war or a bad peace.”
போர்களில் நல்ல போரும் கிடையாது, அமைதியில் கெட்ட அமைதியும் கிடையாது
“He that lies down with Dogs, shall rise up with fleas.”
நாய்களுடன் படுத்து உறங்குபவர்கள் காலையில் சொறியோடுதான் எழ வேண்டும்
“Better slip with foot than tongue.”
கால்கள் இடரலாம், ஆனால் நாக்கு இடரக்கூடாது
“Look before, or you’ll find yourself behind.”
முன்னே பார்த்து நடக்க தவறினால், பின்னுக்கு தள்ளப்படுவோம்.
“Don’t throw stones at your neighbors, if your own windows are glass.”
கண்ணாடியாலானா ஜன்னல் வைத்துக் கொண்டு பக்கத்து வீட்டின் மேல் கல் ஏரியாதீர்.
“He that would live in peace & at ease, Must not speak all he knows or judge all he sees.”
அமைதியாக வாழ விரும்புபவர்கள் தனக்கு தெரிந்ததை எல்லாவற்றையும் பற்றி பேசக்கூடாது. தான் பார்ப்பவர்களை எல்லாம் நீதிபதி போல எடை போடக்கூடாது.
“Well done is better than well said.”
நன்றாக செய்வது, நன்றாக சொல்வதை விட நல்லது
“A true Friend is the best Possession.”
உண்மையான நண்பனே ஒரு நல்ல பொக்கிஷம்.
“Dost thou love life? Then do not squander Time; for that’s the Stuff Life is made of.”
வாழ்க்கையை நேசிப்பவராக இருந்தால் நேரத்தை வீணாக்காதீர்கள். வாழ்க்கை என்பது நேரத்தால் மட்டுமே ஆனது தான்.
“Lost Time is never found again.”
தொலைந்த நேரம் கிடைத்ததே இல்லை.
“When you’re good to others, you’re best to yourself.”
மற்றவர்களுக்கு நல்லவனாக நீங்கள் இருந்தால் உங்களுக்கு மிக மிக நல்லவராக மாறிவிடுவீர்கள்.
“Pardoning the Bad, is injuring the Good.”
கெட்டவர்களை மன்னிப்பதின் மூலம் நீங்கள் நல்லவர்களுக்கு தீங்கு இழைக்கிறீர்கள்.
“Glass, China, and Reputation, are easily crack’d, and never well mended.”
கண்ணாடி வஸ்துக்களும் சீன களிமண்ணால் ஆனா பொருள்களும் போல தான் நல்ல பெயர் உடைந்தால் முன்னால் இருந்தது போல சரி செய்ய முடியாது.
“It is better to take many Injuries than to give one.”
நமக்கு பல காயங்கள் ஏற்பட்டாலும் மற்றவர்க்கு ஒரு காயம் கூட ஏற்படுத்த கூடாது