கே.எஸ்.கிருஷ்ணவேனி
இந்தியாவின் விடுதலைப் போராட்ட வீரரும், இந்திய விடுதலை இயக்கத்தில் முக்கிய புரட்சியாளருமான பகத்சிங் பஞ்சாப் மாநிலத்தில் லயால்பூர் எனும் இடத்தில் பிறந்தவர்.
இந்திய விடுதலைப் போராட்டத்தின் வீரம் செறிந்த பக்கங்களில் பகத்சிங்கின் பெயர் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டது.
கவலையை நினைத்து கண்ணீர் சிந்துவதை விட லட்சியத்தை நினைத்து ரத்தம் சிந்துவது மேல்.
எதிலும் குருட்டு நம்பிக்கை என்பது ஆபத்தானது. மனிதனின் மூளையை முடமாக்கி அவனை பிற்போக்கில் தள்ளிவிடும்.
சான்றோர் ஒரு கட்டத்தில் இறந்து விடுகின்றனர். ஆனால் அவர்களின் நம்பிக்கைகள், குறிக்கோள்கள் இவ்வுலகை பிரகாசிக்க செய்கின்றன.
தனி நபர்களை கொல்வது எளிது. ஆனால் உங்கள் கருத்துக்களைக் கொல்ல முடியாது.
கேளாத செவிகளை கேட்க செய்வதற்கு உரத்த குரல் தேவைப்படுகிறது.
முதலாளித்துவத்தை தூக்கி எறிவதே புரட்சியின் நோக்கம். அநீதிக்கு எதிராக எம்மால் தொடங்கப்பட்ட போர் இனிவரும் காலத்திலும் முடியாது.
தியாகத்தின் மூலமே புரட்சியாளர்களின் கொள்கைகள் வலுவடையும். மாறாக நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதன் ஊடாக அல்ல.
புரட்சி என்பது சொல் அல்ல மாறாக செயல். திட்டமிட்ட சமர் நடவடிக்கைகளின் ஊடாக மாற்றங்களை கொண்டு வருவதே புரட்சியாகும். திட்டமிடாத விஷயங்கள் எதுவும் இதில் நடந்து விடாது.
கடுமையான விமர்சனங்களும், சுதந்திரமான சிந்தனைகளுமே புரட்சியின் தேவைகளாகும்.
அனைவருக்கும் விடுதலையை கொண்டு வரக்கூடியதும், மனிதனை மனிதன் சுரண்டும் கொடுமையை சாத்தியமற்றதாக்க கூடியதுமான புரட்சியின் பலிபீடத்தில் தனி நபர்களின் உயிர்பலிகள் தவிர்க்க இயலாதவை.
ரத்தவெறி கொண்ட மோதல் மாத்திரம் புரட்சி அல்ல. புரட்சி என்பது வெடிகுண்டுகள் துப்பாக்கிகளை வழிபடுவதல்ல. புரட்சியின் ஊடாக அநீதி இழைக்கப்பட்ட சமூகம் மாற்றி அமைக்கப்பட வேண்டும்.
மெழுகுவர்த்தியின் ஒளி மங்குவதைப் போல நானும் மறைந்து விடுவேன். ஆனால் நமது லட்சியங்கள் இவ்வுலகத்தை பிரகாசிக்கச் செய்யும்.
நாட்டின் சுதந்திரத்திற்காக போராடி தனது 23 வது வயதில் தூக்கிலிடப்பட்டவர் பகத்சிங் எனும் புரட்சியாளர்.