எஸ்.மாரிமுத்து
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை முழக்கமாய், குரலற்ற மக்களின் நாயகனாக விளங்கிய அம்பேத்கர் வெறுமனே அரசியல் தலைவர் மட்டுமல்ல. அவர் ஒரு பொருளாதார நிபுணர், சட்ட வல்லுநரும் கூட. மாநிலங்களின் உரிமைகள், மொழி , இனக்குழுக்கள், மக்கள் நலத்திட்டங்கள், அரசின் தன்மை, போராட்டங்களின் வழி முறை என பல தளங்களில் சிந்தித்து உரையாடல் நிகழ்த்தியவர். அவரது பொன் மொழிகள் இதோ.
ஒரு சமூகத்தில் பெண்கள் அடைந்துள்ள வளர்ச்சியை கொண்டு அந்த சமூகத்தின் வளர்ச்சியை அளவிடலாம்.
மாபெரும் லட்சியத்தையும் நம்பிக்கையையும் வாழ்க்கையில் ஏற்றுக் கொண்டால் யாரும் உயர்ந்த நிலையை அடையலாம்.
வெற்றியோ தோல்வியோ எது வரையிலும் கடமையை செய்வோம் யார் பாராட்டினாலும், பாராட்டா விட்டாலும் கவலை வேண்டாம் நம் திறமையும் நேர்மையும் வெளிப்படும்போது பகைவனும் நம்மை மதிக்க தொடங்குவான்.
ஒரு அடிமைக்கு அவன் அடிமை என்பதை முதலில் உணர்த்து. அவன் தானாகவே கிளர்ந்து எழுவான்.
நான் யாருக்கும் அடிமை இல்லை எனக்கு யாரும் அடிமை இல்லை.
தனிமனிதன் இயல்பாக உரிமைகளை பெற்றுள்ளார் அரசியலமைப்பு அவ்வுரிமைகளை பாதுகாக்கிறது.
வறுமையிலும் அறியாமையிலும் வாடும் தம் சகோதரருக்கு பணி செய்வது கற்றவர் ஒருவரின் தலையாய கடமை.
நீதியின் அடித்தளத்தின் மீது எழுப்பப்படாத தேசம் ஒரு தேசமே அல்ல.
ஒரு லட்சியத்தை மேற்கொள்ளுங்கள். அதை அடைவதற்காக விடாமுயற்சியுடன் உழைத்து முன்னேறுங்கள்.
உன்னுடைய விடுதலை அரசியல் அதிகாரத்தில் இருக்கிறது. காவடி தூக்குவதிலோ, உண்ணாவிரதத்திலோ இல்லை.
ஜாதி திமிரும் அதன் கோரப்பிடியும் அழிந்தால் தான் அரசியல் பொருளாதாரத்தில் சீர்திருத்தம் ஏற்படும்.
தீண்டாமை அடிமைத்தனத்தை விட ஆபத்தானது. அது மதத்தை மட்டும் அல்ல, பொருளாதாரத்தையும் அடிமைப்படுத்துகிறது.
குருட்டுப்பக்தி தன்னறிவை இழக்க செய்யும். பகுத்தறிவை பயன்படுத்தாமல் யாரையும் நம்பக் கூடாது.
பலிபீடத்தில் வெட்டப்படுபவை ஆடுகள் தான். சிங்கங்கள் அல்ல. நீங்கள் சிங்கங்களாக இருங்கள்.
அறிவைத் தேடி ஓடுங்கள் நாளை வரலாறு உங்களை நிழலாக தேடி ஓடிவரும்.