வாசுதேவன்
அமெரிக்காவின் 19ஆம் நூற்றாண்டில் வசித்த இயற்கை ஆர்வலர், கவிஞர், தத்துவஞானி ஹென்றி டேவிட் தோரேவு பொன்மொழிகள் சிலவற்றை காண்போம்.
விடியற்காலை நடைப்பயிற்சி அன்றைய முழு தினத்திற்கான கொடுப்பினை.
எவையும் மாறுவதில்லை. நாம் தான் மாற வேண்டும்.
நம்பிக்கை என்ற சிறிய விதை மகிழ்ச்சி என்ற பெரிய பழத்தை விட வலுவானது.
நீங்கள் கண்ட கனவை வாழ முயற்சி செய்யுங்கள்.
ஆசைகள் எந்த அளவு மலிவானதோ அந்த மனிதனே பணக்காரன்.
சொர்க்கம் என்பது நமது கால்களுக்கு கீழேயும், தலைக்கு மேலேயும் உள்ளது.
நட்பின் மொழி வார்த்தைகள் நிரம்பியது அல்ல. பொருள் (அர்த்தம்) கொண்டது.
இந்த உலகம் நமது கற்பனையை வரைய உதவும் திரை.
என்ன பார்க்கிறாய் என்பதை விட அதில் என்ன காண்கிறாய் என்பதே முக்கியம்.
ஒரு முறை செய்யப்பட்டது செய்யப் பட்டதுதான்.
அங்கு போவதாக இருந்தால் தவிர கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்காதே.
ஒவ்வொரு மனிதனும் பிறந்தது வெற்றி அடைவதற்கு, தோல்வியை தழுவ இல்லை.
இந்த பிரபஞ்சம் நம்முடைய கருத்துக்களை விட மிக பிரமாண்டமானது.
கனவுகள் நம்முடைய குணாதிசயங்களை பிரதிபலிக்கும் உரைகள் ஆகும்.
வாழ்கையில் பல தோல்விகளை சந்திக்க நேரிடும். ஆனால் தோல்வியடைய இடம் கொடுக்காதீர்கள்.