பாரதி
உலக பணக்காரர் வரிசையில் எப்போதும் தனக்கென தனி இடத்தைப் பிடித்து வரும் பில் கேட்ஸை தெரியாதவர்கள் உண்டோ? வெற்றியின் பாதையில் பயணிக்க பில் கேட்ஸின் 15 பொன்மொழிகளைப் பார்ப்போம்.
நான் என்னைத் தவிர வேறு யாருடனும் போட்டியிடுவதில்லை. தொடர்ந்து என்னை மேம்படுத்துவதே எனது குறிக்கோள்.
நீங்கள் ஏழையாகப் பிறந்தால் அது உங்கள் தவறு அல்ல, ஆனால் நீங்கள் ஏழையாக இறந்தால் அது உங்கள் தவறு.
நீங்கள் பணம் சம்பாதிக்கலாம், அதற்கு உங்களுக்கு பல சாக்குப்போக்குகள் இருக்கும். ஆனால் நீங்கள் ஒருபோதும் சாக்குப்போக்கிலிருந்து பணம் சம்பாதிக்க முடியாது.
உங்களால் அதை நன்றாக உருவாக்க முடியாவிட்டால், குறைந்தபட்சம் அதை அழகாக உருவாக்குங்கள்.
வெற்றியைக் கொண்டாடுவது நல்லது, ஆனால் தோல்வியிலிருந்து கற்றுக்கொள்வது மிகவும் முக்கியமானது.
மக்கள் எப்பொழுதும் மாற்றத்துக்கு அஞ்சுகிறார்கள். மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டபோது மக்கள் அஞ்சினர், இல்லையா?
ஏழைகளின் உடல்நலம் மற்றும் அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது, எதிர்காலத்தில் இந்த உலகில் நீங்கள் செய்யக்கூடிய சிறந்த முதலீடுகளில் ஒன்றாகும்.
பிரச்னைகள் இருக்கும் இடத்திலேயே அதற்கான தீர்வுகளையும் தேடுங்கள்.
நல்ல முடிவுகள் அனுபவத்திலிருந்து பிறக்கின்றன. ஆனால் அனுபவமோ தவறான முடிவுகளிலிருந்து கிடைக்கிறது.
வெற்றி ஒரு மோசமான ஆசிரியர். அது புத்திசாலிகளை மயக்கி தோல்வியே இல்லை என்ற எண்ணத்தைத் தூண்டும்.
ஒரு செயலை சிறப்பாக செய்ய முடியாவிட்டால் குறைந்தபட்சம் அதை செய்து முடித்துவிட வேண்டும்.
உங்கள் திறமைகளை பற்றி யாருக்குமே கவலை இல்லை. நீங்கள் வெற்றியடைகிறீர்களா? இல்லையா? என்பதையே அனைவரும் கவனிப்பார்கள்.
வெற்றிக்கான ரகசியம் பொருமையாக இருத்தல்.
நான் சரியான நேரத்தில் சரியான இடத்தில் இருப்பது அதிர்ஷ்டம்தான். சிலர் அதே இடத்தில் இருக்கிறார்கள். இந்த இரண்டிற்கான வித்தியாசம், நான் செயலில் இறங்கியதே.
கழிவறையை சுத்தம் செய்ய வேண்டுமென்றாலும்கூட, அதற்கு நூறு சதவீத அளவு உழைப்பைக் கொடுப்பேன்.