எம். ஆர். ஆனந்த்
ஒரு நபர் மிகவும் நேர்மையாக இருக்க கூடாது. ஏனெனில், நேரான மரங்களே முதலில் வெட்டப்படுகின்றன.
வில்வீரன் எய்த அம்பு ஒரு நபரைக் கொல்லலாம் அல்லது கொல்லாமல் போகலாம். ஆனால், ஞானிகள் வகுத்த சூழ்ச்சிகள் கருவில் இருக்கும் குழந்தைகளைக் கூட கொல்லலாம்.
கடந்த காலத்தைப் பற்றி நாம் கவலைப் படக்கூடாது, எதிர்காலத்தைப் பற்றி கவலைப் படக்கூடாது. விவேகமுள்ள மனிதர்கள் தற்போதைய தருணத்தை மட்டுமே கையாளுகிறார்கள்.
புத்தகங்கள், பார்வையற்றவனுக்கு கண்ணாடி எப்படிப் பயன்படுகிறதோ அதே அளவுதான் மூடனுக்கு பயன்படும்.
நீச்சல் அடிக்கும் மீன் எப்போது தண்ணீர் குடிக்கிறது என்பதை அறிய முடியாதது போல், அரசு ஊழியர் பணத்தை திருடுவதையும் கண்டுபிடிக்க முடியாது.
ஒரு மனிதன் தனியாக பிறந்து தனியாக இறக்கிறான். அவன் தன் கர்மாவின் நல்ல மற்றும் கெட்ட விளைவுகளை தனியாக அனுபவிக்கிறான். அவன் தனியாக நரகத்திற்கு அல்லது உன்னதமான இருப்பிடத்திற்கு செல்கிறான்.
உங்களுக்கு மேல் அல்லது கீழ் நிலையில் உள்ளவர்களுடன் நட்பு கொள்ளாதீர்கள். அத்தகைய நட்பு உங்களுக்கு ஒருபோதும் மகிழ்ச்சியைத் தராது.
படிக்காத மனிதனின் வாழ்க்கை ஒரு நாயின் வாலைப் போல பயனற்றது. அது அதன் பின்பகுதியை மறைக்காது, பூச்சிகளின் கடியிலிருந்து பாதுகாக்காது.
மோகத்தைப் போன்ற எதிரியும், கோபத்தைப் போன்ற நெருப்பும் இல்லை.
நம் மனதில் வாழ்பவன் தொலைவில் இருந்தாலும் அருகில் இருக்கிறான். நம் இதயத்தில் இல்லாதவன் தொலைவில் இருக்கிறான், அவன் அருகில் இருந்தாலும்.