வாசுதேவன்
நிதானமாக வளர்ச்சி அடைய அஞ்ச வேண்டாம். வளராமல் ஒரே இடத்தில் நிற்பதை கண்டுத்தான் அஞ்ச வேண்டும்.
எல்லா செயல்களும் கடினம் தான் துவக்கத்தில். பிறகுதான் சுலபம் ஆகும்.
அதிகப்படியாக சிந்தும் வேர்வை பிரச்சனைகளை எதிர் கொள்ள உதவும்.
ஒரு திறமைசாலியின் பின்னால் பல திறமை சாலிகள் இருப்பார்கள்.
பெரிய இலக்கை அடைய தடங்கல்களை எதிர்க்கொள்ள தயங்க கூடாது.
கூட்டு முயற்சி ( team efforts and work ) தனி நபரின் செயல்பாட்டை விட அதிக ரிசல்ட்டை அளிக்கும்.
சுவர்களுக்கு அந்த புறம் காதுகள் கேட்டுக் கொண்டு இருக்கின்றன என்பதை நினைவு கொள்க.
காற்று திசை மாற்றி வேகமாக வீசும் பொழுது சிலர் சுவர் எழுப்பவர். சிலர் காற்றலை (windmill) கட்டுவார்கள்.
நிகழ்காலத்தில் நன்றாக கால் பதித்து, எதிர் காலத்தில் கவனம் செலுத்தவும்.
பழையவற்றை மதிப்பாய்வு செய்து (review the old) புதியதை கற்றுக் கொள்ளவும்.
வெவ்வேறு பூட்டுக்கள் திறக்க வெவ்வேறு சாவிகள் உபயோகிக்க வேண்டும்.
நீளம் அதிகம் உள்ள நூலினால் காற்றாடி அதிக உயரம் பறக்கும்.
உண்மைகளை விவரங்கள் வாயிலாக அறியவும்.
பயணத்தில் 90 % கடந்தாலும், பாதி தூரம் சென்றதற்குதான் சமம்.
ஒரு புத்திசாலி நபருடன் உரையாடுவது, ஒரு மாதம் படிக்கும் புத்தகங்களை விட மேலானது