எஸ்.மாரிமுத்து
malala quotes:
1/11. பெண் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல வேண்டும். பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது தான் நாங்கள் கேட்பதெல்லாம். நாங்கள் எந்த சலுகையையும் கேட்கவில்லை. இவை அடிப்படை மனித உரிமைகள்.
2/11. கல்வி என்பது வாழ்வின் வரங்களில் ஒன்று - அதன் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றும் கூட!
3/11. யாராவது உங்கள் பேனாக்களைப் பறிக்கும் போது தான் கல்வி எவ்வளவு முக்கியமானது என்பதை நீங்கள் உணர்வீர்கள்!
4/11. நாங்கள் பயந்தோம். ஆனால் எங்கள் பயத்தை விட எங்கள் தைரியம் வலிமையாக இருந்தது!
5/11. பயப்படாதீர்கள். பயந்தால் உங்களால் முன்னேற முடியாது!
6/11. ஒரு ஆணால் எல்லாவற்றையும் அழிக்க முடியும் என்றால், ஒரு பெண்ணால் ஏன் அதை மாற்ற முடியாது?
7/11. துப்பாக்கிகளால், பயங்கர வாதிகளைக் கொல்லலாம். கல்வியால் பயங்கரவாதத்தை ஒழிக்கலாம்!
8/11. நமது எதிர்காலத்தை இப்போதே உருவாக்குவோம். நமது கனவுகளை நாளைய நனவாக்குவோம்!
9/11. என்னிடம் விசேஷமாக எதுவும் இல்லை. என் கதையில் உள்ள ஒரே வித்தியாசம், என் தந்தை என்னை தடுக்கவில்லை என்பது தான்!
10/11. ஒட்டு மொத்த உலகமும் மவுனம் காக்கும் போது, ஒரே ஒரு குரல் கூட சக்தி வாய்ந்ததாக மாறும்!
11/11. வாள், பேனா ஆகிய இரு சக்திகள் உலகில் உள்ளன. நம்முடைய புத்தகங்களையும், பேனாக்களையும் கையில் எடுப்போம்! அவைதான் மிகச் சக்தி வாய்ந்த ஆயுதங்கள்!