உங்கள் கனவுகளை நனவாக்க விவேகானந்தர் சொன்ன அந்த ஒரு வார்த்தை! மிஸ் பண்ணாதீங்க!

அகிலா சிவராமன்

1/12. இருதயம் விரிவடைந்துள்ள இடத்தில் தான் உண்மை ஞானம் உதிக்கும். அந்த உண்மை ஞானம் தான் நம்பிக்கை.

Swami Vivekananda's quotes | AI image

2/12. கோழைகளே பாவ காரியங்களைப் புரிந்திடுவர். தைரியமுடையோர் ஒருக்காலும் பாவம் செய்யார்.

Swami Vivekananda's quotes | AI image

3/12. பலமற்ற மூளையில் நாம் எதையுமே செய்ய இயலாது. அதனால் நாம் அதைப் பலப்படுத்த வேண்டும்.

Swami Vivekananda's quotes | AI image

4/12. அச்சமே நமக்குத் துயரத்தைத் தருவது. அச்சமே கேட்டை விளைவிப்பது. அச்சமே மரணத்தைத் தருவது. நமது உண்மை இயல்பை நாம் அறிந்து கொள்ளாமல் இருப்பதனால் தான் நமக்கு அச்சம் ஏற்படுகின்றது.

Swami Vivekananda's quotes | AI image

5/12. அன்புடையவனே வாழ்பவன். சுயநலமுடையவனோ செத்துக் கொண்டிருக்கின்றான் என்றே பொருள்.

Swami Vivekananda's quotes | AI image

6/12. தன்னை அடக்கப் பழகிக் கொண்டவன் வேறு எதற்கும் சிக்கமாட்டான். அத்தகையவன் உலகில் நன்றாக வாழத் தகுதியுள்ளவன்.

Swami Vivekananda's quotes | AI image

7/12. உண்மைக்காக எதையும் துறக்கலாம்; ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்காதே.

Swami Vivekananda's quotes | AI image

8/12. பணம் மட்டுமே வாழ்க்கையல்ல. அதையும் தாண்டி மனிதன் அடைய வேண்டிய அனுபவங்கள் பல உள்ளன. மன நிம்மதி, அன்பு, தவம், தியானம் முதலிய குணங்கள் எல்லாம் பணத்தால் வருபவை அல்ல.

Swami Vivekananda's quotes | AI image

9/12. துக்கம் என்பது அறியாமையின் காரணமாகத்தான் ஏற்படுகிறது. வேறு எதனாலும் அன்று.

Swami Vivekananda's quotes | AI image

10/12. நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!

Swami Vivekananda's quotes | AI image

11/12. அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு.

Swami Vivekananda's quotes | AI image

12/12. நீ செய்த தவறுகளை வாழ்த்து. அவைகள், நீ அறியாமலே உனக்கு வழிகாட்டும் தெய்வங்களாக இருந்திருக்கின்றன.

Swami Vivekananda's quotes | AI image
Chess game
<strong>சதுரங்கத்தின் ரகசியங்கள் தெரிந்தால்... உங்கள் வாழ்க்கையிலும் நீங்கள் தான் 'ராஜா'!</strong>