பள்ளிக்கூடம் போகாமலே ஜீனியஸ் ஆகலாமா? இதோ செல்ஃப் லேர்னிங் சீக்ரெட்ஸ்!

கிரி கணபதி

புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளப் பள்ளியோ கல்லூரியோ தான் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. நமக்குள் இருக்கும் ஆர்வமும் சரியான வழிகாட்டுதலும் இருந்தால், உங்களை நீங்களே ஒரு ஜீனியஸாக எப்படி மாற்றிக் கொள்வது என இங்கே பார்ப்போம்.

Self-Education

1. தினமும் காலை 5:00 மணிக்கு எழுந்து புதிய விஷயங்களைக் கற்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அதிகாலையில் மூளை மிகச் சுறுசுறுப்பாக இருப்பதால் கடினமான பாடங்கள் கூட எளிதாகப் புரியும்.

Self-Education

2. நீங்கள் எதைக் கற்றுக்கொள்ளப் போகிறீர்கள் என்பதில் முதலில் ஒரு தெளிவான முடிவை எடுங்கள். எந்தத் திசையில் பயணிக்கிறோம் என்பது தெரிந்தால் மட்டுமே இலக்கை வேகமாக அடைய முடியும்.

Self-Education

3. புதிய மொழியோ அல்லது தொழில்நுட்பமோ கற்க, ஜெமினி போன்ற ஏ.ஐ கருவிகளை உங்களின் தனிப்பட்ட ஆசிரியராகப் பயன்படுத்துங்கள். இவை உங்கள் சந்தேகங்களைச் சலிப்பில்லாமல் உடனடியாகத் தீர்த்து வைக்கும்.

Self-Education

4. நீங்கள் புதிதாகக் கற்றுக்கொண்ட விஷயங்களை மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள். இப்படிச் செய்வதால் அந்த விஷயம் உங்கள் மனதில் ஆழமாகப் பதிந்து எக்காலத்திலும் மறக்காது.

Self-Education

5. ஒரு பெரிய விஷயத்தை ஒரே நாளில் கற்றுக்கொள்ள ஒருபோதும் முயற்சிக்காதீர்கள். அதைச் சிறு சிறு பகுதிகளாகப் பிரித்துப் தினமும் கொஞ்சம் கொஞ்சமாகக் கற்றுக்கொள்ளுங்கள்.

Self-Education

6. உங்கள் துறை சார்ந்த புத்தகங்கள் மற்றும் கட்டுரைகளைத் தினமும் குறைந்தது அரை மணி நேரமாவது வாசியுங்கள். வாசிப்புப் பழக்கம் உங்கள் சிந்தனைத் திறனைப் பல மடங்கு விரிவுபடுத்தும்.

Self-Education

7. எதையும் அப்படியே நம்பாமல், 'ஏன், எதற்கு' என்று தொடர்ந்து கேள்விகளைக் கேளுங்கள். இந்தக் கேள்வி கேட்கும் ஆர்வம்தான் உங்களை ஒரு ஜீனியஸாக மாற்றும் முதல் படியாகும்.

Self-Education

8. படிக்கும்போது உங்கள் மொபைல் போனை வேறு ஒரு அறையில் வைத்து விடுங்கள். முழுமையான கவனம் இருந்தால் மட்டுமே ஒரு விஷயத்தை மிகத் துல்லியமாகக் கற்றுக்கொள்ள முடியும்.

Self-Education

9. வெறும் தியரியாகப் படிப்பதை விட, அதைப் பிராக்டிக்கலாக செய்து பாருங்கள். படித்ததை நடைமுறையில் பயன்படுத்தும்போதுதான் அதிலுள்ள உண்மையான சவால்கள் உங்களுக்குப் புரியும்.

Self-Education

10. புதிய விஷயங்களைக் கற்கும்போது ஆரம்பத்தில் பல தவறுகள் நடப்பது மிகவும் சகஜமே. அந்தத் தவறுகளில் இருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு சோர்வில்லாமல் மீண்டும் முயற்சி செய்யுங்கள்.

Self-Education

சுய கல்வி என்பது உங்களை நீங்களே செதுக்கிக் கொள்ளும் ஒரு அற்புதமான கலையாகும். இந்தச் வழிமுறைகளைத் தினமும் பின்பற்றி, நாளுக்கு நாள் உங்களை நீங்களே ஒரு சிறந்த அறிவாளியாக மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

Self-Education
Bike Ride
இதையெல்லாம் 30 வயதிற்குள் செய்யாட்டி அப்புறம் எப்போ செய்வீங்க?