நான்சி மலர்
கருப்பு நிறத்தை விரும்புவோர் தங்கள் உடை, பொருட்கள், படுக்கையறை என்று அனைத்திலும் கருப்பு நிறம் இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். கருப்பு நிறத்தை விரும்புவோரின் 10 முக்கிய பண்புகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் காண்போம்.
இவர்கள் மற்றவர்களை கட்டுப்படுத்தும் ஆளுமையும், உறுதியான ஆற்றலையும் கொண்டவர்களாக இருப்பார்கள்.
எளிய விஷயங்களை கூட மிக நேர்த்தியாகவும், அழகாகவும் செய்யக் கூடியவர்கள்.
இவர்களுக்குள் ஒரு மர்மமான அல்லது ரகசிய பக்கம் இருக்கும்.
தங்கள் உணர்வுகளை தங்களுக்குள்ளேயே வைத்துக் கொள்ள விரும்புவார்கள்.
அவர்கள் அணியும் கருப்பு நிறம் அவர்களின் உண்மையான உணர்ச்சிகளை மறைக்க உதவுகிறது.
எதற்கும் எளிதில் அஞ்சமாட்டார்கள். இலக்கை நோக்கி துணிச்சலாக செல்வார்கள்.
தேவையில்லாத பேச்சுகளை தவிர்த்து காரியத்தில் கண்ணாக இருப்பார்கள்.
சில நேரங்களில் வெளியுலக விமர்சனங்களில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளவே இவர்கள் கருப்பு நிறத்தை அரணாகப் பயன்படுத்துவார்கள்.
தாங்கள் செய்வது சரி என்று பட்டால் அதை மிகுந்த தன்னம்பிக்கையோடு செய்து முடிப்பார்கள்.
தங்கள் வாழ்க்கையை தாங்களே வடிவமைக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருப்பார்கள்.