அக்னி சிறகுகள் நாயகன் அப்துல் கலாம்! வியக்க வைக்கும் 10 தகவல்கள்!

கிரி கணபதி

அக்டோபர் 15, 1931 ஆம் ஆண்டு பிறந்த டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களைப் பார்ப்போம்.

APJ Abdul Kalam

1. சிறு வயதில் குடும்பத்திற்காக செய்தித்தாள் விற்றார். தனது கடின உழைப்பால் நாட்டின் உயர்ந்த பதவியை அடைந்தார்.

APJ Abdul Kalam

2. போர் விமானியாக வேண்டும் என்பதே இவரின் கனவாகும். நேர்காணலில் மிக நூலிழையில் அந்த வாய்ப்பைத் தவறவிட்டார்.

APJ Abdul Kalam

3. இந்தியாவின் ஏவுகணை மனிதர் என இவர் போற்றப்படுகிறார். அக்னி, பிரித்வி போன்ற சக்திவாய்ந்த ஏவுகணைகளை உருவாக்கினார்.

APJ Abdul Kalam

4. பொக்ரான் அணு ஆயுத சோதனையை வெற்றிகரமாக நடத்தினார். இதனால் இந்தியாவின் மிகப்பெரிய வல்லமை உலகிற்குத் தெரிந்தது.

APJ Abdul Kalam

5. மக்களின் ஜனாதிபதி என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்டார். குழந்தைகள் மற்றும் மாணவர்கள் மீது அளவற்ற அன்பு கொண்டிருந்தார்.

APJ Abdul Kalam

6. இசையின் மீது இவர் அதீத ஆர்வம் கொண்டிருந்த இவர் ஓய்வு நேரங்களில் வீணை வாசிப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.

APJ Abdul Kalam

7. பதவியில் இருந்தபோதும் தன் வாழ்நாள் முழுவதும் எளிமையாகவே வாழ்ந்தார். அவர் எப்போதுமே சுத்தமான சைவ உணவுகளை மட்டுமே உட்கொண்டார்.

APJ Abdul Kalam

8. இளைஞர்களைத் தொடர்ந்து பெரிய கனவு காணச் சொல்லி ஊக்குவித்தார். மாணவர்களுடன் உரையாடுவதைத் தனது வாழ்நாள் முழுவதும் நேசித்தார்.

APJ Abdul Kalam

9. அக்னிச் சிறகுகள் போன்ற பல்வேறு சிறந்த நூல்களை எழுதியுள்ளார். இவை இன்றுவரை பலருக்கும் மாபெரும் உந்துசக்தியாக விளங்குகின்றன.

APJ Abdul Kalam

10. மாணவர்களுக்கு மேடையில் உரையாற்றிக் கொண்டிருக்கும்போதே தன் இன்னுயிரை நீத்தார். இறுதிவரை கல்விக்காகவே தனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்து வாழ்ந்தார்.

APJ Abdul Kalam

டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் எளிமையும் சிந்தனையும் என்றென்றும் நம் மனதில் நிலைத்திருக்கும். அவர் விட்டுச்சென்ற வழியில் பயணிப்பதே நாம் அவருக்குச் செலுத்தும் மிகப்பெரிய மரியாதையாகும்.

APJ Abdul Kalam
Recipe
10 நிமிடத்தில் செம கிரிஸ்பி ஈவினிங் ஸ்நாக்ஸ்! குழந்தைகளை அசத்த இதை உடனே ட்ரை பண்ணுங்க!