எஸ்.மாரிமுத்து
Kamarajar quotes:
1/12. சுதந்திரம் என்றால் பயம் இல்லாது வாழ்வதுதான் - பயம் இல்லாது வாழ நியாயம் ஆக நடந்து கொள்ள வேண்டும்!
2/12. நேரம் தவறாமை என்னும் கருவியை உபயோகிப்பவன் எப்பொழுதும் கதாநாயகன் தான்!
3/12. பிறர் உழைப்பை தன் சுயநலத்துக்கு பயன்படுத்துவது உலகின் மிகவும் கேவலமான செயலாகும்!
4/12. படித்த சாதி, படிக்காத சாதி என்றொரு சாதி உண்டாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்!
5/12. உன் பிள்ளை ஊனமாய்ப் பிறந்தால் சொத்து சேர்த்து வை. சொத்து சேர்த்து வைத்து பிள்ளையை ஊனமாக்காதே!
6/12. சட்டமும் விதிமுறைகளும் மக்களுக்காகவே ஏற்பட்டவை. சட்டத்துக்காகவும் விதிமுறைகளுக்காகவும் மக்கள் இல்லை!
7/12. எல்லாம் போய்விட்டாலும் வெல்ல முடியாத உள்ளம் இருந்தால் உலகத்தையே கைப்பற்றலாம்!
8/12. நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு உழைக்காத மனிதன் பிணத்துக்கு சமமாவன்!
9/12. லட்சத்தை அடைய அமைதியான வழிகளை பின்பற்ற வேண்டும் பலாத்காரப் புரட்சி தேவையில்லை!
10/12. நாடு முன்னேற வறுமையும் அறியாமையும் போக வேண்டும். இரண்டும் போனால் அன்றி நாடு முன்னேறியதாக சொல்ல முடியாது!
11/12. ஒரு பெண்ணிற்கு கல்வி புகட்டுவது ஒரு குடும்பத்திற்கு கல்வி புகட்டுவது ஆகும்!
12/12. எல்லோருடைய வாழ்க்கையும் வரலாறு ஆவதில்லை. வரலாறாய் ஆனவர்கள் தனக்காக வாழ்ந்ததில்லை!