வாசுதேவன்
அமெரிக்காவின் 28 வது ஜனாதிபதியாக திகழ்ந்த வுட்ரோவ் வில்சன் பொன்மொழிகள் பற்றி காணலாம்.
தலைவனின் காதுகளில் மக்களின் குரல்கள் ஒலிக்க வேண்டும்.
மக்களுக்கு சேவை செய்வதை விட மேலானது எதுவும் கிடையாது.
பழமைவாதி எப்பொழுதும் அமர்ந்துக் கொண்டு சிந்தித்துக் கொண்டே இருப்பான்.
எதிர்நீச்சல் அடிப்பவருக்கு தெரியும் நீரின் வீரியம் எவ்வளவு என்று.
நீங்கள் எதிரிகளை உருவாக்க விரும்பினால் சிறிய மாற்றங்கள் செய்யுங்கள்.
எச்சரிக்கை என்பது சுயநலத்தின் ரகசிய முகவர்.
ஒரு அருமையான தீர்ப்பு ஆயிரம் அவசர ஆலோசனைகளுக்கு மதிப்புள்ளது.
நிர்வாகத்துறை என்பது வணிகத் துறை.
நட்பால் மட்டுமே உலகை ஒன்றாக வைத்திருக்க முடியும்.
ஆசைகள் குறைவாக இருந்தால் அதிக அமைதி.
வாழ்க்கை சிந்திப்பதில் இல்லை. செயல்படுவதில்.
தோல்வி அடைந்த பிறகும் தீவிர முயற்சி எடுப்பவர் வலுவான மனிதர் ஆவார்.
வளர்ச்சி அடைய கனவுகள் முக்கியம். பிரபலம் அடைந்த பலர் அதிகமாக கனவு கண்டவர்கள் ஆவார்கள்.
கடவுளிடம் முதலில் வேண்டுவது தினசரி உணவு வேண்டும் என்பதே ஆகும்.
உரிமை என்பது அமைதியை விட உன்னதமானது.