ஆர்.ஜெயலட்சுமி
சிறப்பு என்பது ஆற்றலை சரியான வழியில் பயன்படுத்திக் கொள்வதில் தான் இருக்கிறது - ஹென்றி பீச்சர்
மிகச் சிறிய விஷயங்களில் கூட சிறந்த கவனம் செலுத்துபவர்கள் உயர்ந்த மனிதர்கள் ஆகிறார்கள்.
காலம் பொன் போன்றது, ஆனால் அதைவிட உண்மை சிறந்தது –டிஸ்ரேலி
மனிதனின் மனம் எதை நினைக்கிறதோ நம்புகிறதோ அதில் அவன் வெற்றி பெறுகிறான்- நெப்போலியன் ஹில்
பொறுமையாய் இருப்பது கடினம் தான், அதன் முடிவே சமாதானம்.
முயற்சியில்தான் மனநிறைவு அடங்கியுள்ளதே தவிர அதன் முடிவில் அல்ல -எலியட்.
எந்த பக்கவிளைவும் இல்லாத போதை மருந்து சிரிப்புதான்.
பணத்தின் உண்மையான மதிப்பு பிறரிடம் கடன் கேட்கும் போது தான் தெரியும் -பிராங்ளின்.
செல்வம் படைத்தவனுக்கு செருக்கு உடன் பிறந்த தம்பி.
மகிழ்ச்சியும் வீரமும் முகத்திற்கு அழகு.
இளமை இருக்கும்போது சேமிப்பு செய், முதுமை அடையும் போது செலவு செய் -டோரோ
கடனாக பெற்ற பணத்தை கொண்டு உன்னால் உறுதியான பாதுகாப்பை தேட முடியாது - லிங்கன்
ஒரு நாளைக்கு சிறிது நேரமாவது ஒரு குழந்தைக்கு பாடம் சொல்லிக் கொடுங்கள். அப்போதுதான் நீங்கள் கற்க முடியும் -பிராங்க் கிளார்க்
கற்பனை என்ற கண்ணாடியை எவ்வளவு உயரமாக வேண்டுமானாலும் பறக்க விடலாம்.
ஒரு பக்கம் மட்டும் கேட்டால் இருட்டில் இருப்பாய். இரு பக்கமும் கேட்டால் எல்லாம் தெளிவாகும் - தாமஸ் ஸி ஹேலி பேர்ட்டன் .