Osho Quotes: ஓஷோவின் 15 வாழ்வியல் தத்துவங்கள்!

பாரதி

மத்தியபிரதேசத்தில் பிறந்த ஓஷோ அமெரிக்காவரை சென்று தனது ஆசிரமத்தை நிறுவினார். துறவியும் ஆன்மீகவாதியுமான ஓஷோ தனது 21வது வயதில் ஞானமடைந்ததாக சொல்லப்படுகிறது. அந்தவகையில் அவரின் பொன்மொழிகள் குறித்துப் பார்ப்போம்.

Osho quotes | Imge Credit: Pinterest

நமது உடலைத் தவிர உலகில் வேறு எந்தக் கோவில்களும் இல்லை.

Osho quotes | Imge Credit: Pinterest

உங்கள் நேர்மை, உங்கள் அன்பு, உங்கள் இரக்கம் உங்கள் உள்ளத்திலிருந்து வர வேண்டும், போதனைகள் மற்றும் வேதங்களிலிருந்து அல்ல.

Osho quotes | Imge Credit: Pinterest

உங்கள் இதயம் சொல்வதைக் கேளுங்கள். அதுவே உங்களின் ஒரே ஆசிரியர்.

Osho quotes | Imge Credit: Pinterest

வாழ்க்கையில் முக்கியமான ஒரே விஷயம், உங்களைப் பற்றிய உங்கள் சொந்தக் கருத்துக்கள் மட்டுமே.

Osho quotes | Imge Credit: Pinterest

பயம் மனதிலிருந்து வருகிறது, அன்பு உங்கள் இதயத்திலிருந்து வருகிறது, இதயம் சொல்வதைக் கேளுங்கள்.

Osho quotes | Imge Credit: Pinterest

நட்சத்திரங்களைப் பார்ப்பதற்கு ஒரு குறிப்பிட்ட அளவு இருள் தேவையானது.

Osho quotes | Imge Credit: Pinterest

உங்களை நீங்களே கண்டுபிடியுங்கள், இல்லையெனில் நீங்கள் தங்களை தாங்களே அறியாத மற்றவர்களின் கருத்துக்களை சார்ந்திருக்க வேண்டும்.

Osho quotes | Imge Credit: Pinterest

நீங்கள் ரோஜாவாகவோ அல்லது தாமரையாகவோ அல்லது சாமந்திப்பூவாகவோ இருப்பது முக்கியமல்ல. நீங்கள் பூப்பதுதான் முக்கியம்.

Osho quotes | Imge Credit: Pinterest

இது நல்லது, அது கெட்டது என்று சொல்லாதீர்கள். எல்லாப் பாகுபாடுகளையும் கைவிடுங்கள். எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள்.

Osho Quotes | Imge Credit: Pinterest

ஒப்பீடு என்பது மிகவும் முட்டாள்தனமான அணுகுமுறை, ஏனெனில் ஒவ்வொரு நபரும் தனித்துவமானவர் மற்றும் ஒப்பிடமுடியாதவர். இந்தப் புரிதல் உங்களில் நிலைபெற்றவுடன், பொறாமை மறைந்துவிடும்.

Osho Quotes | Imge Credit: Pinterest

உங்கள் தலையிலிருந்து வெளியேறி உங்கள் இதயத்திற்குள் நுழையுங்கள். குறைவாக சிந்தியுங்கள், அதிகமாக உணருங்கள்.Imge Credit: Pinterest

Osho quotes | Imge Credit: Pinterest

வாழ்க்கை மீது கோபப்படாதீர்கள். வாழ்க்கை உங்களை ஏமாற்றவில்லை, நீங்கள்தான் வாழ்க்கை சொல்வதைக் கேட்கவில்லை.

Osho quotes | Imge Credit: Pinterest

எதற்காகவும் உங்கள் வாழ்க்கையை தியாகம் செய்யாதீர்கள், வாழ்க்கைக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்யுங்கள், வாழ்க்கையே இறுதி இலக்கு.

Osho quotes | Imge Credit: Pinterest

இதயம் ஒரு பூவைப் போன்றது. அது திறந்திருக்காவிட்டால், அது அதன் வாசனையை இந்த உலகிற்கு வெளியிட முடியாது.

Osho quotes | Imge Credit: Pinterest

உங்களை நீங்களே ஏற்றுக்கொள்ளும் தருணத்தில், நீங்கள் அழகாக மாறுகிறீர்கள்.

Osho quotes | Imge Credit: Pinterest
Facts about chicken | Imeg Credit: Pinterest
கோழிகள் பற்றி சில தகவல்கள்!