கோழிகள் பற்றி சில தகவல்கள்!

வாசுதேவன்

கோழிகள் பறவை வகையை சார்ந்தவை. வண்ணக் கோழி குடும்பம் மற்றும் காட்டுக் கோழி பேரினத்தில் பங்கு வகிப்பவை.

Facts about chicken | Imge Credit: Pinterest

ஆண் கோழிகளை சேவல் என்றும், பெண் கோழிகளை பெட்டை கோழி என்றும் அழைக்கின்றனர். குட்டி சிறிய கோழிகள் கோழிக் குஞ்சுகள் ஆகும்.

Facts about chicken | Imge Credit: Pinterest

உலகில் உள்ள எல்லா கோழியினங்களும் இந்தியாவைத் தயமாகாக் கொண்ட சிவப்புக் காட்டுக்
கோழியிலிருந்து உருவாகியதாக கருதப்படுகின்றது.

Facts about chicken | Imge Credit: Pinterest

கோழிகள் அதிகபட்சம் பத்து வருடங்கள் உயிர் வாழும். இவை கூட்டமாக வாழும் தன்மை கொண்டவை.

Facts about chicken | Imge Credit: Pinterest

விடுகளில் வளர்க்கப்படும் கோழிகள் அதிக தூரம் பறக்காது. பெரும்பாலும் நடந்தே நகரும். ஆபத்தை உணர்ந்தால் பறக்க முயலும்.

Facts about chicken | Imge Credit: Pinterest

சில நேரங்களில் பெட்டைக் கோழி முட்டையிட்டதும் பெரிதாக கொக்கரிக்கும். கோழிகள் 21 நாட்கள் அடை காக்கும்.

Facts about chicken | Imge Credit: Pinterest

கோழிகள் உணவு கிடைத்தால் கொக்கரிப்பதன் மூலம் குஞ்சுகளுக்கு உணவு உண்ண வகை வகுக்கும்.

Facts about chicken | Imge Credit: Pinterest

கோழி ஓர் அனைத்துண்ணிப் பறவையாகும். நிலத்தை கிளறி விதைகள், பூச்சிகள், தானிய வகைகள் இவற்றை உண்ணும்.

Facts about chicken | Imge Credit: Pinterest

பல வகை கோழி இனங்கள் உள்ளன. அமெரிக்க, ஆசிய, ஆங்கில மற்றும் மத்திய கோழி இனங்களாக பிரிக்கப் பட்டுள்ளன.

Facts about chicken | Imge Credit: Pinterest

பல வகை வண்ணங்கள் கலந்தும் கோழிகள் காணப்படும். சில வகைகள் இறகுகள் இல்லாமலும் காணப்படுகின்றன.

Facts about chicken | Imge Credit: Pinterest

தோல் நிறம் மஞ்சள், வெள்ளை மற்றும் முட்டைகள் ஓட்டின் நிறம் பழுப்பு, வெள்ளை நிறத்திலும் இருக்கும்.

Facts about chicken | Imge Credit: Pinterest

நாட்டுக் கோழி. ஆந்திர பிரதேசத்தை சார்ந்தவை. சண்டை போடும் திறன் கொண்டவை ஏசெல் என்று அழைக்கப் படுகின்றன.

Facts about chicken | Imge Credit: Pinterest

சிறுவிடை வகை தமிழகத்தை தாயகமாக கொண்டவை. அதிக பட்சமாக சேவல் இரண்டு கிலோவும், பெட்டை கோழி ஒன்றரை கிலோவும் எடை இருக்கும்.

Facts about chicken | Imge Credit: Pinterest

ஹிட்காரி வகை நீளமான கழுத்து உடையவை. கழுத்து முன் பகுதியில் கொத்தாக சிறகுகள் இருக்கும். கேரளாவின் திருவனந்தபுரத்தை சார்ந்தவை.

Facts about chicken | Imge Credit: Pinterest

யு பி கரி வகை. சுரு சுருப்புக்கு பெயர் பெற்றவை. வீடுகளில் வளர்க்க தோதானது. நோய் எதிர்ப்பு திறன், நல்ல வளர்ச்சியும் கொண்டவை.

Facts about chicken | Imge Credit: Pinterest

கரி சியாமா வகை. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் ஆகிய இடங்களில் காணப்படுபவை. இவற்றின் இறைச்சி மருத்தவ குணம் கொண்டதாக் கருதப்படுகின்றது.

Facts about chicken | Imge Credit: Baghel Agro Industries

தமிழ் நாட்டில் நாமக்கல் பகுதியில் அதிக கோழி பண்ணைகள் உள்ளன. இங்கு உற்பத்தியாகும் முட்டைகள் மேல் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

Facts about chicken | Imge Credit: Flickr
Gayatri Mantras | Imge Credit: Pinterest
Part 2: ஒவ்வொரு தெய்வங்களுக்கான பிரத்யேக காயத்ரி மந்திரம்!