சாந்தி ஜொ
அன்றாடச் செயல்களில் வாசிப்பு பழக்கத்தையும் ஒன்றாக்கினால், அதன் மூலமாகக் கிடைக்கும் பயனை நாம் உணரலாம். அந்தவகையில் புத்தகங்களால் மாமேதைகளானவர்கள் கூறிய பொன்மொழிகள் சிலவற்றைப் பார்ப்போம்.
நான் வாசிக்காத புத்தகத்தை வாங்கிக் கொண்டு வருபவரே என் சிறந்த நண்பர் - ஆபிரகாம் லிங்கன்
எங்கே தங்க விரும்புகிறீர்கள் என்று லண்டன் தோழர்கள் கேட்டபோது, எது நூலகத்துக்கு அருகில் உள்ளது எனக் கேட்டவர் டாக்டர் அம்பேத்கர்.
தான் தூக்கிலிடுவதற்கு ஒரு நிமிடம் முன்புவரை வாசித்துக்கொண்டு இருந்தவர் பகத்சிங்.
ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது ஒரு நூலகம் கட்டுவேன் என்றவர் மகாத்மா காந்தி
நல்ல புத்தகங்களை வாசிக்காத ஒருவன் வாசிக்கவே தெரியாதவனைவிட உயர்ந்தவன் அல்ல - மார்க் டிவைன்
உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ, அதுபோல மனப்பயிற்சிக்கு புத்தக வாசிப்பு - சிக்மண்ட் பிராய்டு
எவ்வளவோ கேளிக்கைகளைக் குழந்தைகளைக் கவர ஏற்படுத்தினேன். எல்லாவற்றையும் விட அதிகப் புதையல் புத்தகங்களிலே உள்ளன - வால்ட் டிசினி
ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக்கொள்ளும்போது வரும் முன்பணத்தில் முதல் நூறு டாலருக்குப் புத்தகம் வாங்குபவர் சார்லி சாப்லின்.
ஒரு நூலகம் திறக்கப்படும்போது ஊரில் ஒரு சிறைச்சாலை மூடப்படும் - விவேகானந்தர்
வேறு எந்தச் சுதந்திரமும் வேண்டாம். சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும் - நெல்சன் மண்டேலா
மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்புப் புத்தகம் - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
எங்கே நல்ல புத்தகங்கள் எரிக்கப்படுகின்றனவோ அங்கு விரைவில் நல்ல மனிதர்களும் எரிக்கப்படுவார்கள் - சேகுவாரா
புத்தகத்தை படித்து முடிப்பதற்கு அறுவை சிகிச்சையை ஒருநாள் தள்ளிவைத்தார் அறிஞர் அண்ணா