பாரதி
ஈரானைச் சேர்ந்த உலகப்புகழ் மிக்க கவிஞரும், ஆன்மீகவாதியுமான ரூமி, பாரசீக மொழிகளில் நிறைய படைப்புகளை உருவாக்கியிருக்கிறார். இவரின் எழுத்துக்களின் மதிப்பறிந்து பல மொழிகளில் இவரின் படைப்புகள் மொழிப்பெயர்க்கப்பட்டன. அந்தவகையில் அவரின் பொன்மொழிகள் பற்றிப் பார்ப்போம்.
உங்கள் வார்த்தைகளை உயர்த்துங்கள், குரலை அல்ல. மழைதான் பூக்களை வளர்க்கிறது, இடி அல்ல.
நேற்று நான் ஒரு புத்திசாலி, அதனால் நான் உலகை மாற்ற விரும்பினேன். இன்று நான் ஒரு ஞானி, அதனால் என்னை நானே மாற்றிக் கொள்கிறேன்.
கதவின் பூட்டு நீங்கள்தான் என்று நினைக்கிறீர்கள். ஆனால் அதைத் திறக்கும் சாவியே நீங்கள்தான்.
வருத்தப்படாதீர்கள். நீங்கள் இழக்கும் எதுவும் வேறொரு வடிவத்தில் திரும்ப வரும்.
நீங்கள் கடவுளுடன் தனிமையில் இருக்கும்போது மட்டுமே உண்மையான ஓய்வு கிடைக்கும்.
வாழ்க்கையின் நோக்கம் அன்பாக மாறும் போது அனைத்து சந்தேகங்கள், விரக்தி மற்றும் அச்சம் போன்றவை முக்கியமற்றதாகிவிடும்.
உங்கள் சொந்த ஆன்மாவை அறியும் ஆசை மற்ற எல்லா ஆசைகளையும் அழித்துவிடும்.
நீங்கள் எதைத் தேடுகிறீர்கள் என்பதன் மூலம் நீங்கள் உங்கள் மதிப்பைக் காட்டுகிறீர்கள்.
ஏற்கனவே உங்கள் கழுத்தில் இருக்கும் வைர மாலையைத் தேடி நீங்கள் அறை அறையாக அலைகிறீர்கள்.
நீங்கள் எதைத் தேடுகிறீர்களோ அது உங்களைத் தேடுகிறது.
உலகம் ஒரு மலை, அதில் உங்கள் வார்த்தைகள் உங்களுக்கு எதிரொலிக்கின்றன.
காயம் என்பது, ஒளி உங்களுக்குள் நுழையும் இடம்.
நீங்கள் உலகில் புதையலைத் தேடுகிறீர்கள், ஆனால் உண்மையான புதையல் நீங்களே.
உங்களுக்கு இறக்கைகள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தவும் பறக்கவும் கற்றுக்கொள்ளுங்கள்.
அழகான நாட்கள் உங்களைத் தேடி வருவதில்லை. நீங்கள்தான் அவற்றை நோக்கி நகர வேண்டும்.