மகாலெட்சுமி சுப்ரமணியன்
பூரண ஞானம் அடைந்தவனுக்கு, துயரம் என்பது இல்லை.
செயலில் கெட்டது செய்பவனை விட மனதால் கெட்டவனே மிகவும் கெட்டவன்.
எவர் ஒருவர் தன் கடமைகளை சரிவர செய்கிறாரோ, அவருக்கு உரிமைகள் தானாகவே வந்தடையும்.
எத்தனை துன்பங்கள் பகைவர்களால் வந்தாலும், அதை அன்பாலேயே வென்று விடுங்கள்.
தியாகம் தான் வாழ்க்கைக்கு இயற்கை கற்றுத்தந்த பாடம்.
பிறர் தவறு கண்டு தன் தவறை திருத்திக்கொள்பவன் அறிவாளி.
எப்போதும் உண்மையை மறைக்காமல் சொல்கிற மனத்திண்மை வேண்டும்.
கண் பார்வை அற்றவன் குருடன் அல்ல,தன் குற்றங்களை உணராதவனே குருடன்.
எவர் ஒருவர் தனக்குத் தானே மனக்கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்கிறானோ, அவனே சுதந்திர மனிதனாவான்.
கல்வியில் சிறந்தவன் என்று பெயர் வாங்குவதை விட ஒழுக்கத்தில் சிறந்தவன் என்று பெயர் வாங்குவதே சிறந்தது.
பொய்யை மெய்யாலும், விரோதத்தை அன்பாலும், ஆத்திரத்தை சகிப்புத்தன்மையாலும் வெல்லலாம்.
நம்பிக்கையுடையவன் எதையும் எளிதில் முடிக்கும் திறமையுடையவன்.
மனிதனின் முழுத் திறமைகளின் வெளிப்பாடே உண்மையான கல்வி.
மிருகத்தைப் போல நடக்கும் மனிதன், மிருகத்தைவிடவும் மோசமானவன்.
இந்த உலகத்தில் நாம் கொடுப்பதுதான் நம்மை செல்வந்தனாக்குமே தவிர நாம் பெற்றுக்கொள்வதல்ல.
பிறர் எப்படி இருக்க வேண்டுமென நீ விரும்புகிறாயோ, அது போல் முதலில் நீ மாறு.
அன்பு எப்போதும் சகிப்புத்தன்மை உடையதாக இருக்கும். ஒரு போதும் கோபிக்காது. ஒருபோதும் பழிவாங்காது.