கவிதா பாலாஜிகணேஷ்
உன் வெற்றிகளை எண்ணி பார்க்காதே!
உன் தோல்விகளை மட்டும் எண்ணிப்பார், வெற்றியை விட உயர்ந்தது தோல்விகள் தான்!
வெற்றிபெறும் நேரத்தைவிட நாம் மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் வாழும் நேரமே, நாம் பெறும் பெரிய வெற்றி.
பல முறை முயற்சித்தும் உனக்கு தோல்வி என்றால், உன் இலக்கு தவறு, சரியான இலக்கை தேர்ந்தெடு.
எல்லாம் தெரியும் என்பவர்களை விட என்னால் முடியும் என்று முயற்சிப்பவரே வாழ்வில் ஜெயிக்கின்றனர்.
ஒவ்வொரு நாளும் வெற்றி பயணத்தை தொடங்கிவிட்டேன் என்று முதலடி எடுத்து வை.
தன்னம்பிக்கை இருக்கும் அளவுக்கு முயற்சியும் இருந்தால் தான் வெற்றி சாத்தியம்.
வியர்வை துளியை அதிகப்படுத்து வெற்றி வந்தடையும் வெகு விரைவில்.
ஒரு நாள் விடியும் என்று காத்திருக்காமல் இன்றே முடியுமென முயற்சி செய் வேதனைகளும் வெற்றிகளாக மாறலாம்.
திறமையும் நம்பிக்கையும் இருந்தால் கண்டிப்பாக வாழ்க்கையில் ஜெயிக்க முடியும்.