பாரதி
மிக இளம் வயதிலேயே தொழில்நுட்பத்தில் மிகப்பெரிய புரட்சிகளை செய்தவர் ஸ்டீவ் ஜாப்ஸ். அந்தவகையில் அவரின் பொன்மொழிகள் பற்றிப் பார்ப்போம்.
மற்றவர்களின் கூச்சல் மற்றும் கருத்துக்கள் உங்கள் உட்குரலை மூழ்கடிக்கச் செய்ய அனுமதிக்காதீர்கள்.
எதையாவது எளிமையாக மாற்றியமைப்பதற்கு, ஏராளமான கடின உழைப்புத் தேவைப்படுகிறது.
உங்கள் இதயத்தையும் உள்ளுணர்வையும் பின்தொடர தைரியம் வேண்டும்.
உங்களுக்குப் பேரார்வம் இல்லையெனில், உங்கள் இலக்கைவிட்டு வெளியேறிவிடுவீர்கள்.
தோல்விக்குப் பயந்தால் நீங்கள் வெகுதூரம் செல்ல மாட்டீர்கள்.
தன்னால் இந்த உலகை மாற்ற முடியும் என்று நினைக்கும் அளவுக்குப் பைத்தியக்காரத்தனம் உடையவர்கள்தான், இந்த உலகை மாற்றுகிறார்கள்.
உண்மையான திருப்தியை அடைய ஒரே வழி, சிறந்த வேலை என நீங்கள் நம்பும் வேலையைச் செய்வதாகும்.
எங்களிடம் உள்ள மிகவும் விலைமதிப்பற்ற வளம் நேரமாகும்.
சில நேரங்களில் வாழ்க்கை உங்கள் தலையில் கல்லால் அடிக்கும். ஆனால் நம்பிக்கையை இழக்காதீர்கள்.
சிறிதாகத் தொடங்குங்கள், பெரிதாகச் சிந்தியுங்கள். ஒரே நேரத்தில் பல விஷயங்களைப் பற்றி கவலைப்படாதீர்கள்.
கணினி மொழியை அனைவரும் கற்க வேண்டும். ஏனெனில் எப்படிச் சிந்திக்க வேண்டும் என்பதை அது கற்றுத்தருகிறது.
எல்லாவற்றையும் செய்ய முயற்சிக்காதீர்கள். ஒரு விஷயத்தைச் சிறப்பாகச் செய்யுங்கள்.
பிரச்சனையை சரியாக வரையறுத்துவிட்டாலே கிட்டத்தட்ட தீர்வு உங்களிடம் இருக்கும்.
வாழ்க்கை என்பது நினைவுகளை உருவாக்குவதுதான்.
"பணமும் வசதிகளும் மட்டுமே வாழ்க்கையில்லை என்பதை இறுதியில்தான் அறிந்துகொண்டேன்."