சதுரங்கத்தின் ரகசியங்கள் தெரிந்தால்... உங்கள் வாழ்க்கையிலும் நீங்கள் தான் 'ராஜா'!

நான்சி மலர்

1/11. சதுரங்க விளையாட்டு (Chess) வெறும் ஒரு பொழுதுபோக்கு மட்டுமல்ல, அது வாழ்க்கைக்குத் தேவையான மிகச்சிறந்த பாடங்களைக் கற்றுத்தரும் ஒரு வாழ்வியல் தத்துவம்.

chess life lesson

2/11. சதுரங்கத்தில் ஒரு காயை நகர்த்துவதற்கு முன், அதற்கு அடுத்த நகர்வுகள் என்னவாக இருக்கும் என்று யோசிக்க வேண்டும். வாழ்க்கையில் எந்தவொரு முடிவை எடுப்பதற்கு முன்பும், அதன் நீண்டகால விளைவுகளை முன்கூட்டியே சிந்தித்துச் செயல்பட இது கற்றுத்தருகிறது.

chess life lesson

3/11. நீங்கள் செய்யும் ஒரு சிறிய தவறான நகர்வு, உங்கள் ஆட்டத்தையே மாற்றிவிடும். அதேபோலத்தான் வாழ்க்கையிலும் நாம் எடுக்கும் ஒவ்வொரு சிறிய முடிவுக்கும், செய்யும் செயலுக்கும் ஒரு பலன் அல்லது பாதிப்பு நிச்சயம் இருக்கும்.

chess life lesson

4/11. அவசரப்பட்டு நகர்த்தப்படும் காய் பெரும்பாலும் தோல்வியில்தான் முடியும். நிதானம் எவ்வளவு பெரிய ஆபத்தையும் தவிர்க்கும் என்பதை சதுரங்கம் உணர்த்துகிறது.

chess life lesson

5/11. ஒரு பெரிய வெற்றிக்காக ராணியையே கூட தியாகம் செய்ய வேண்டிய சூழல் வரலாம். அதைப் போலவே, வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இலக்கை எட்ட வேண்டும் என்றால், தியாகம் செய்யும் மனப்பக்குவம் அவசியம்.

chess life lesson

6/11. ஆட்டத்தின் இறுதியில் ஒரு சிறிய 'சிப்பாய்' கூட ராணியாக மாறி ஆட்டத்தின் போக்கையே மாற்ற முடியும். எனவே, யாரையும் எளியவர் என்று குறைத்து மதிப்பிடக் கூடாது.

chess life lesson

7/11. சதுரங்கத்தில் தோற்ற ஆட்டங்களை அலசி ஆராய்பவர்களே ஜெயிக்க முடியும். நாம் செய்த தவறுகளை ஒப்புக்கொண்டு, அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு அடுத்த முறை சிறப்பாகச் செயல்பட வேண்டும்.

chess life lesson

8/11. சதுரங்கத்தில் கவனம் சிதறினால் தோல்வி நிச்சயம். வாழ்க்கையின் இலக்குகளை அடையும் போது வரும் கவனச்சிதறல்களைத் தவிர்த்து, ஒற்றை இலக்கோடு பயணிக்க வேண்டும்.

chess life lesson

9/11. நம்முடைய முதல் திட்டம் தோல்வியடையும் போது, அடுத்த கட்டமாக என்ன செய்ய வேண்டும் என்ற மாற்று உத்தி கைவசம் இருக்க வேண்டும். சூழ்நிலைக்கு ஏற்ப நம்மை மாற்றிக்கொண்டு போராட சதுரங்கம் கற்றுக்கொடுக்கிறது.

chess life lesson

10/11. ஒவ்வொரு காய்க்கும் ஒரு குறிப்பிட்ட எல்லை உண்டு. அந்தந்த எல்லைகளுக்குள் இருந்துகொண்டே புத்திசாலித்தனமாகச் செயல்பட்டு, ஜெயிக்க வேண்டும் என்பதுதான் இந்த ஆட்டத்தின் ரகசியம்.

chess life lesson

11/11. ஆட்டம் முடியும் வரைதான் ராஜா, ராணி, சிப்பாய் எல்லாம். ஆட்டம் முடிந்ததும் அனைத்தும் ஒரே பெட்டிக்குள்தான் செல்ல வேண்டும். வாழ்க்கையின் இறுதி உண்மையும் இதுவே.

chess life lesson
Hair Fall
சீப்புல கொத்து கொத்தா முடி வருதா? இந்த சின்ன தப்பை முதல்ல நிறுத்துங்க!