புவனா நாகராஜன்
அன்பை விதையுங்கள்.
அறிவை வளருங்கள்.
அகம்பாவம் தவிருங்கள்.
ஆசையே துயரத்திற்கு காரணம்.
ஆலயம் தொழுவதே சாலவும் நன்று.
ஆத்திரம் குறைக்கலாம்.
இயன்றதை செய்யலாம்.
இயல்பாய் வாழலாம்.
இனிமையாய் பேசுங்கள்.
ஈகை கடைபிடியுங்கள்.
ஈசன் திருவடியை நாடுங்கள்.
ஈவு இறக்கம் கடைபிடித்தல் நல்லதே!
உதவும் கரங்களாய் வாழ்தலே நல்லது.
உயர்ந்த உள்ளமே நலம் பயக்கும்.
உழைப்பின் மேன்மை உணர்வதே நல்லது.
ஊதாரித்தனம் தவிருங்கள்.
ஊழல்செய்தல் வேண்டாம்.
ஊரின் பெருமை சொல்லுங்கள்.
எதற்கும் அஞ்சவேண்டாம்.
எண்ணம் தூய்மையாய் இருப்பதே நலம்.
எந்த தவறும்செய்தல் வேண்டாம்.
ஏளனம் செய்யாதீா்கள்
ஏழைக்கு உதவுங்கள்,
ஏமாற்ற வேண்டாம்.
ஐயம் தவிருங்கள்.
ஐங்கரனை வேண்டுங்கள்.
ஐங்கரன் ஐயம் தீர்ப்பான்.
ஒருவருக்கும் தீங்கு செய்ய வேண்டாம்.
ஒற்றுமையே உயர்வுக்கான வழியாகும்.
ஒருபோதும் சோம்பல் வேண்டாம்.
ஓதாமல் ஒருநாளும் இருக்கவேண்டாம்.
ஓர் உயிர்க்கும் தீயதையே செய்யவேண்டாம்.
ஒருநாளும் உழைக்காமல் உண்ணவேண்டாம்.
ஒளவையார் சொல்லிய வழியே நடப்பது நல்லது.
ஒளடதம் காத்திடுங்கள்.
ஒளடதங்கள் உடலுக்கு வலிமை தரும்
ஃதே அனைவருக்கும் நல்லதாம்.