சுவையான 10 கலர்ஃபுல் 'டீ'க்களும் ஆரோக்கிய பலன்களும்!

நான்சி மலர்

Hibiscus Tea என்பது செம்பருத்தி பூவின் இதழ்களை நன்றாக வெயிலில் காய வைத்து அதை பயன்படுத்தி போடப்படுகிறது. இந்த டீ பார்ப்பதற்கு சிவப்பு நிறத்தில் இருக்கும். இதன் சுவை சற்று புளிப்பாக இருந்தாலும், இதில் அதிக ஆன்டி ஆக்ஸிடன்ட் இருப்பதால் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது.

Hibiscus tea

சங்கு பூவில் இருந்து Blue tea தயாரிக்கப்படுகிறது. இதில் அதிக அளவு ஆன்டி ஆக்ஸிடன்ட் இருக்கிறது. இது மூளை சுறுசுறுப்பாக இயங்கவும், சருமம் மற்றும் தலைமுடி ஆரோக்கியமாக இருக்கவும் உதவுகிறது.

Blue tea

மஞ்சள் நிற டீ Dandelion செடியில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதை அருந்துவதால் கல்லீரலை சுத்தப்படுத்துவதோடு மட்டுமில்லாமல் செரிமானத்திற்கு நன்கு உதவுகிறது.

Dandelion Tea

ரோஜா இதழ்களைப் பயன்படுத்தி செய்யப்பட்டு டீயை 'பிங்க் டீ' என்கிறோம். இது பார்ப்பதற்கு பிங்க் நிறத்தில் இருக்கும். சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தி நம் உடலில் இருக்கும் ஸ்ட்ரெஸ்ஸை குறைக்க உதவுகிறது.

Rose petal tea

Matcha tea க்ரீன் டீயின் இலையில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இது பார்ப்பற்கு பச்சை நிறத்தில் இருக்கும். இதில் ஆன்டி ஆக்ஸிடென்ட் அதிகமாக உள்ளது. மெட்டபாலிசத்தை அதிகரித்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

Matcha tea

Lavender tea லேவெண்டர் பூவில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இது பார்ப்பதற்கு Purple நிறத்தில் இருக்கும். இந்த டீயை குடிப்பதால், ஸ்ட்ரெஸ் குறைத்து ரிலேக்ஷான உணர்வைக் கொடுக்கும்.

Lavender tea

பிளாக் டீயில்(Black tea) அதிக அளவு ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் Photochemicals உள்ளது. இது இதய சம்மந்தமான நோய் ஏற்படுவதை தடுக்கும், எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மேலும் ஆரோக்கியமான சருமத்தை பராமரிக்க உதவும்.

Black tea

Camellia sinensis என்னும் செடியில் இருந்து புதியதாக முளைத்த இலைகளை சேமித்து காய வைத்து போடப்படும் டீயை White tea என்கிறோம். இதில் அதிக ஆன்டி ஆக்ஸிடென்ட் இருக்கிறது. கொலஸ்ரால், ரத்த அழுத்தம், உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.

White tea

Oolong tea சீனாவில் மிகவும் பிரபலமாகும். இது சீன மருத்துவத்தில் அங்கிகரிக்கப்பட்ட தேநீர் ஆகும். இது பார்ப்பதற்கு ஆரஞ்ச் நிறத்தில் இருக்கும். இந்த டீயை அருந்துவதின் மூலமாக நம் பற்களில் ஏற்படும் சிதைவை தடுக்க உதவுகிறது, சருமத்தை பாதுகாக்கிறது. இந்த தேநீரில் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது.

Oolong tea

Earl grey tea ஒரு சிறந்த டீ வகையாக கருதப்படுகிறது. இதை பிளாக் டீ மற்றும் Bergamot Orange ல் இருந்து எடுக்கப்படும் எண்ணெய்யையும் கலந்து உருவாக்கப்படுகிறது. இதனால் இந்த டீக்கு ஒரு தனித்துவமான சுவைக் கிடைப்பதாக சொல்லப்படுகிறது. இதை அருந்துவதால் உடல் எடை மற்றும் கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது.

Earl grey tea
healthy body
பெண்களே எச்சரிக்கை! இந்த காயை மட்டும் ஒதுக்காதீர்கள்!