இந்திரா கோபாலன்
10 things to do alone:
1. யாரும் பார்க்கிறார்கள் என்ற பயமில்லாமல் உங்களுக்குப் பிடித்த உணவை ரசித்து, உங்களோடு நீங்களே பேசிக் கொண்டு சாப்பிடுங்கள். மனோதத்துவத்தில் இதற்கு spot light effect என்று பெயர். மற்றவர்கள் நம்மையே பார்க்கிறார்கள் என்பது மாயை. தனியாகச் சாப்பிடும் போது இந்த பயம் உடைந்து சுயசார்பு கூடுகிறது.
2. ரயில் அல்லது பேருந்தில் எந்த திட்டமில்லாமல் பயணியுங்கள். இலக்கில்லா பயணங்கள் மூளையில் மகிழ்ச்சி ஹார்மோனான டோபமைனை சுரக்கச் செய்யும் எதிர்பாராத திருப்பங்களை மூளை எதிர்கொள்ளும் போது உங்கள் சுதாரிப்புத் திறன் அதிகரிக்கும்.
3. உங்களுக்குத் தெரியாத ஒரு ஊருக்குச் செல்லுங்கள். தெரிந்த மனிதர்கள் இல்லாத போது நாமாக உருவாக்கிய முகமூடிகள் கழன்று விழுகின்றன. அங்குதான் உற்சாகம் உண்மையான சுயம் உங்களுக்கு அறிமுகமாகும்.
4. சத்தமில்லாத இடத்தில் யாரிடமும் பேசாமல் வார இறுதியைக் கழியுங்கள். வெளி உலக சத்தம் அடங்கும் போதுதான் ஆழ்மனதின் குரல் கேட்கும். இது மூளையின் default mode network DNNஐத் தூண்டி மன அமைதியை தரும் என்று நரம்பியல் ஆய்வுகள் கூறுகின்றன.
5. இக்கட்டான சூழலில் யாரிடமும் உதவி கேட்காமல் தனியாகச் சமாளியுங்கள். நாம் தனியாக ஒரு பிரச்னையைக் தீர்க்கும் போதுதான் மூளையின் கார்டெக்ஸ் பகுதி தீவிரமாகச் செயல்படுகிறது. இது என்னால் எதையும் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை விதைக்கும்.
6. 24 மணி நேரம் இணையம், ஃபோன், சமூக ஊடகங்கள் இவற்றிற்கு விடை கொடுங்கள். இதெல்லாம் நம்மை தாற்காலிக மகிழ்ச்சிக்கு அடிமையாக்குகின்றன. இதிலிருந்து ஒருநாள் விலகி இருப்பது கவனம் சிதறல் நின்று மூளை ரீசெட் ஆகிறது.
7. ஒரு மராத்தான் ஓட்டம்,மலையேற்றம் அல்லது கடினமான திறமையைக் கற்றுக் கொள்வது போன்ற சவாலைத் தனியே முடியுங்கள். அது உங்கள் மீளெழும் திறனை வளர்க்கிறது. வலிகள் தான் சிறந்த ஒழுக்கத்தை உருவாக்குகின்றன.
8. காடு,மலை அல்லது கடலோரத்தில் இயற்கையோடு தனியாகச் செலவிடுங்கள். இதனால் சோர்வை ஏற்படுத்தும் கார்டிசால் குறைந்து மன அழுத்தம் குறைகிறது.
9. மற்றவர்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் தராமல் உங்கள் வாழ்வில் முக்கிய முடிவை நீங்களே எடுங்கள். தவறு நேர்ந்தால் பழி போட யாரும் இருக்க மாட்டார்கள் என்ற பொறுப்புணர்வு வரும் போது உங்கள் பகுத்தறிவு உச்சத்தைத் தொடும். உங்கள் வாழ்க்கைக்கு நீங்களே பொறுப்பு என்ற முதிர்ச்சி வரும்
10. உங்களின் சிறிய அல்லது பெரிய வெற்றியைத் தனியாகக் கொண்டாடுங்கள். மற்றவர்களின் கைதட்டல் புகழ்ச்சி இதையெல்லாம் எதிர்பாராமல் கொண்டாடும் போது மிகுந்த தன்னம்பிக்கை பிறக்கும்.