எஸ்.மாரிமுத்து
கடினமான முயற்சி, உழைப்பு மற்றும் விடாமுயற்சி ஆகியவை வெற்றிக்கு அடிப்படை - டாக்டர் ராதாகிருஷ்ணன்
வாழ்க்கையில் சிறந்த ஞான ஆசிரியரை பெற்றுவிட்டால் நிச்சயம் பிறவி கடனை தாண்டி விடலாம் - டாக்டர் ராதாகிருஷ்ணன்.
பட்டதாரிகள் தங்கள் அறிவை மனித குலத்தின் மேன்மைக்காக பயன்படுத்த முன்வர வேண்டும். - டாக்டர்.எஸ்.ராதாகிருஷ்ணன்.
முதலில் சேவை, பின் தன்னலம் என்ற மனப்பான்மை ஏற்பட வேண்டும். அப்போதுதான் நல்ல சமூகம் உருவாகும் - எஸ்.ராதாகிருஷ்ணன்.
ஒரு ஆசிரியர் வெறுமனே தகவல்களைப் பரிமாற்றுபவர் அல்ல, அவர் மாணவர்களை சிந்திக்கத் தூண்டும் ஒரு கருவி. - எஸ்.ராதா கிருஷ்ணன்.
ஒரு நல்ல ஆசிரியர், அறிவுப் பரிமாற்றத்தை விட, மாணவர்களுக்கு கற்றலின் மீது ஆர்வத்தை ஏற்படுத்துகிறார் - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
ஒரு தேசத்தின் சிறந்த அறிஞர்கள் ஆசிரியர்களாக இருக்க வேண்டும். - டாக்டர் எஸ் .ராதாகிருஷ்ணன்.
புத்தகம் எழுதும் ஆசிரியருக்கு மனக்கட்டுப்பாடும் உணர்வு பூர்வமான சிந்தனையும் அவசியம். - டாக்டர்.எஸ்.ராதாகிருஷ்ணன்.
கற்றலில் நீங்கள் கற்பிப்பீர்கள். கற்பிப்பதில் நீங்கள் கற்றுக்கொள்வீர்கள் -பில் காலின்ஸ் .
கல்வி என்பது ஒரு சமுதாயத்தின் ஆன்மா, அது ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு செல்கிறது -ஜி .கே . செஸ்டர் டன்.
கற்பிக்க துணிந்தவர் ஒருபோதும் கற்றுக்கொள்வதை நிறுத்தக்கூடாது - ஜான்.சி டானா .
யார் யாருக்கும் எதையும் கற்பிக்க முடியாது, ஆனால் என்னால் அவர்களை சிந்திக்க வைக்க முடியும் -சாக்ரடீஸ்.
கற்பித்தல் என்பது புரிதலின் மிக உயர்ந்த வடிவம் - அரிஸ்டாட்டில்.
உங்களைச் சுற்றியுள்ள அனைவரும் உங்கள் ஆசிரியர் - கென் கீஸ்..
நல்ல ஆசிரியர் என்பவர் அறிவுத் தேடலில் மாணவனுடன் சக பயணியாக பயணிக்க வேண்டும் - டாக்டர்.எஸ்.ராதாகிருஷ்ணன்