சி.ஆர்.ஹரிஹரன்
பசி இல்லாதவர்கள் இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வர நல்ல பசி எடுக்கும்.
இருமல், கபம் போன்றவற்றால் மூச்சுத்திணறும் குழந்தைகளுக்கு இஞ்சிச்சாறு, மாதுளம் பழச்சாறு கலவையுடன் தேன் கலந்து குடிக்கக் கொடுத்தால் உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.
இஞ்சிச்சாறுடன் சிறிது சீரகம், சிறிது மிளகுத்தூள் சேர்த்து சாப்பிட்டால் புளித்த ஏப்பம் நிற்கும். சாப்பிடும் உணவு நன்கு ஜீரணமாகும்.
வெறும் வயிற்றில் இஞ்சிச்சாறுடன் கொஞ்சம் தேன் சேர்த்துப் பருகினால் உடல் அசதி நீங்கி விடும்.
இஞ்சியும் தேனும் சேர்த்து ஜூஸ் செய்து பருகி வர தொண்டைக் கட்டுக்கு நிவாரணம் கிடைக்கும்.
கால்கிலோ இஞ்சியை நறுக்கி, இரண்டு லிட்டர் நீர் சேர்த்து, நன்றாக ஊறவைத்து, வெல்லம் சேர்த்து, சிறுதீயில் கொதிக்க வைத்து பாகு பதத்தில் இறக்கி வைக்கவும். இதைத் தினமும் அரை டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால் சுவையின்மை, பசியின்மைக்கு நிவாரணம் கிடைக்கும்.
தலைசுற்றல், தலைவலிக்கு இஞ்சியுடன் வெங்காயத்தை பற்று போட்டால் போதும்.
இஞ்சிச் சட்னி செய்து மாதத்தில் இரண்டு முறையாவது சாப்பிட்டு வர செரிமானக் கோளாறுகள் விலகி விடும்.
இஞ்சிச்சாறுடன் தேனை சம அளவில் கலந்து ஒரு நாளைக்கு மூன்று முறை சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் நீங்கி விடும்.
எண்ணெய்க் குளியலுக்குப் பின் இஞ்சிச்சாறு அருந்துவது நல்லது. உணவுப் பாதைகள் சுத்தமாகி பசி எடுக்கும்.
சுக்கை அரைத்து நெற்றியில் பற்றிட தலைவலி குணமாகும்.
இஞ்சிச்சாறுடன் தேன் கலந்து குடித்து வர பித்தம் நீங்கி விடும்.