பணத்தை ஈர்க்கும் 10 அதிர்ஷ்ட செடிகள்!

நான்சி மலர்

நெல்லிக்காய் லக்ஷ்மி கடாட்சம் அதிகம் கொண்ட மரம். இந்த மரத்தை வீட்டில் வளர்த்தால், இழந்த செல்வங்கள் திரும்ப கிடைக்கும், பண வரவு அதிகரிக்கும். நெல்லிமரத்தை வீட்டின் முன் பக்கத்தில் கிழக்கு திசை பார்த்தவாறு வைப்பது சிறப்பாகும்.

Amla tree

சங்கு பூ செடி பணவரவை தரக்கூடியது. இந்த செடியில் இருந்து வரக்கூடிய பூ சங்கு வடிவத்தில் இருக்கும். சங்கு பெருமாளையும், லக்ஷ்மியையும் குறிக்கும். இதில் நீலநிற சங்குப்பூவை வளர்ப்பது நல்லது. 

Sangu poo Plant

மகாலக்ஷ்மியின் அம்சமாக துளசி செடி சொல்லப்படுகிறது. வீட்டின் முன் பக்கம் அல்லது பின்பக்கம் எங்கு வேண்டுமானாலும் வைத்து வளர்க்கலாம். இதை வீட்டில் மாடம் அமைத்து விளக்கேற்றி வழிப்பட்டு வந்தால், செல்வ செழிப்பு அதிகரிக்கும்.

Tulasi plant

கற்றாழை செடியை கண்டிப்பாக வீட்டின் முன்பக்கம் தான் வளர்க்க வேண்டும். இதை வீட்டின் முன்பக்கம் வளர்ப்பதால், கண் திருஷ்டி குறையும். வீட்டின் முன் பக்கத்தில் வலது அல்லது இடதுப்பக்கத்தில் வைத்து வளர்க்கலாம்.

Aloe vera plant

இந்த செடியில் இருக்கும் பூக்கள் எப்படி வாடாமல் இருக்கிறதோ அதைப்போல நம் மனமும் வாடாமல் எந்த நெகட்டிவ் எனர்ஜியும் நம்மை அண்டாமல் இருக்கும். இதில் வெள்ளை நிற வாடாமல்லியை தவிர்த்து விடுவது நல்லது.

Vadamalli plant

இந்த வகை மூங்கில் செடியை வீட்டில் வைப்பது நல்லது. இந்த Lucky bamboo வளர வளர வீட்டில் அதிர்ஷ்டமும் அதிகரிக்கும். இதை கிழக்கு அல்லது வடகிழக்கு திசையில் தான் வைத்து வளர்க்க வேண்டும். இந்த செடியை வீட்டிற்கு வெளியே வைக்கக்கூடாது.

Lucky bamboo

எல்லோருடைய வீட்டிலும் மணி பிளான்ட் கண்டிப்பாக இருக்கும். இந்த செடிக்கு பணத்தை ஈர்க்கும் தன்மை உண்டு என்று சொல்வார்கள். இந்த செடியை தென்கிழக்கு திசையில் மட்டும் தான் வைக்க வேண்டும். அப்போது தான் நல்ல பலன் கிடைக்கும்.

Money plant

இந்த செடி ஒரு வீட்டில் நன்றாக வளர்கிறது என்றால், அவர்களுக்கு கோடீஸ்வர யோகம் வரப்போவதாக அர்த்தம். காலை பிரம்ம முகூர்த்தத்தில் நாம் என்ன வேண்டிக்கொண்டு இந்த செடியை தொட்டாலும் அது அப்படியே நடக்கும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

Thotta Chinungi plant

ஆடாதொடை நிறைய மருத்துவ பலன்களைக் கொண்டது. இந்த செடி நம் வீட்டில் இருந்தாலே எந்த விதமான கெட்ட சக்திகளும் வீட்டிற்குள் வராது. இதை கிழக்கு அல்லது வடகிழக்கு திசையில் வைத்து வளர்ப்பது நல்லது.

Adathodai plant

கண்டிப்பாக வீட்டில் ஏதாவது வாசனை தரக்கூடிய பூச்செடியை வளர்த்து வர வேண்டும். வாசனை மிகுந்த இடத்தில் தான் லக்ஷ்மி தேவி வாசம் செய்வாள். எனவே, மல்லிச்செடி, ரோஜா போன்ற செடிகளை வளர்த்து வருவது செல்வ செழிப்பை அதிகரிக்கும். 

Rose plant
Teachers day | Imge credit: Pinterest
Teacher's day quotes: அரிஸ்டாட்டில் முதல் சாக்ரடீஸ் வரை... ஆசிரியர்கள் பற்றி உலக அறிஞர்கள் சொன்ன ரகசியங்கள்!</a></strong>