நான்சி மலர்
வீட்டில் குறிப்பிட்ட நிறத்தில் மீன்கள் வளரக்கூடியது, வாஸ்து சாஸ்திரப்படி, வெவ்வேறு பலன்களைத் தரும். வீட்டில் மீன் தொட்டி வைப்பது நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும். இந்தப் பதிவில்10 வகை மீன்களும் அவற்றின் பலன்களையும் பற்றி காண்போம்.
வாஸ்துவில் தங்க மீன் மிக முக்கியமான மீன். இது செல்வ செழிப்பின் அடையாளமாகக் கருதப்படுகிறது.
மீன் தொட்டியில் ஒரு கருப்பு மீன் இருப்பது அவசியம். இது திருஷ்டி, எதிர்மறை ஆற்றல்களை உறிஞ்சிக் கொள்ளும்.
அரோவனா மீன் அதிகாரம், வெற்றி மற்றும் பெரும் செல்வத்தை ஈர்க்கக்கூடியது.
பெட்டா மீன் தனித்து வாழும் குணம் கொண்டவை. இது ஒருவரின் மன உறுதி மற்றும் தன்னம்பிக்கையை அதிகரிக்க உதவும்.
Red Cap Oranda, வெள்ளை நிற உடலில் தலையில் மட்டும் சிவப்பு நிறம் கொண்ட இந்த மீன், மகிழ்ச்சி மற்றும் புகழைத் தரும்.
கருப்பு மற்றும் மஞ்சள் நிற மாலி மீன்கள் வீட்டில் சுறுசுறுப்பையும், நேர்மறை சிந்தனையையும் உண்டாக்கும்.
Flowerhorn fish தலையில் மேடு போன்ற அமைப்பைக் கொண்டது. இது அதிர்ஷ்டத்தையும், ஆரோக்கியத்தையும் தருவதாக நம்பப்படுகிறது.
Gourami fish குடும்பத்தில் அன்பு மற்றும் ஒற்றுமையை பலப்படுத்தும். இவை ஜோடியாக வளர்க்கப்படும் மீன்கள்.
வெள்ளை அல்லது வெளிர் நிற ஏஞ்சல் மீன்கள் வீட்டில் அமைதி மற்றும் தெய்வீக அதிர்வுகளை உண்டாக்கும். மன அழுத்தம் குறைய உதவும்.
Koi Fish இது விடாமுயற்சி மற்றும் முன்னேற்றத்தின் அடையாளம். வாழ்வில் வெற்றி பெற விரும்புபவர்கள் வளர்க்கலாம்.