புவனா நாகராஜன்
நமது வீட்டிற்குள் பறவைகள் மற்றும் வேறு வகையான உயிரினங்கள் வருகை, தருவது உண்டு. இதனால் சிலர் சந்தோஷம் அடைவதும் சங்கடப்படுவதுடும் உண்டு. சில பூச்சி பறவை கால்நடைகள் வீட்டிற்குள் வருவதால் ஏற்படும் பலாபலன்களை பாா்க்கலாம்.
பல்லி வீட்டில் வாசம் செய்வதால் குலதெய்வத்தின் அருள் இருக்கும்.
செங்குருவி வீட்டிற்குள் பறந்தால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும்.
சேவல் வீட்டிற்குள் வந்தால் வியாபார அபிவிருத்தி உண்டாகும்.
காகம் வீட்டிற்குள் வந்தால் முன்னோா்கள் வருகைக்கான அறிகுறியாகும்.
பொன்வண்டு வீட்டிற்குள் வந்தால் எடுத்த காாியம் வெற்றியடையும்.
புறா வீட்டிற்குள் வந்தால் பணம் பொருள் வரவுக்கு வழிவகுக்கும்.
ஆந்தை வீட்டிற்குள் வந்தால் லெட்சுமி தேவி வாசம் உண்டாகும்.
கிளி வீட்டிற்குள் வந்தால் எதிா்பாராத நன்மைகள் உண்டாகும்.
மயில் வந்தால் சுபிட்சம் மற்றும் இறைவன் அருள் பெருகும்.
பசுமாடு வீட்டிற்குள் வந்தால் லெட்சுமி தேவி வாசம் செய்வாள்.
நாய் வீட்டிற்குள் வந்தால் கண்திருஷ்டி அகலும்.