மிரட்டும் மெட்ராஸ் ஐ! தப்பிப்பது எப்படி? இந்த 10 விஷயங்களை மறந்தும் செய்யாதீங்க...

நான்சி மலர்

தற்போது மெட்ராஸ் ஐ (Madras Eye) எனப்படும் விழிவெண்படல அழற்சி வேகமாகப் பரவி வரும் நிலையில், அதிலிருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்ளவும், மற்றவர்களுக்குப் பரவாமல் தடுக்கவும் உதவும் 10 முக்கியமான குறிப்புகள்.

Madras eye

மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் நீங்களாகவே மருந்துக் கடைகளில் சொட்டு மருந்துகளை (Eye drops) வாங்கி ஊற்ற வேண்டாம். இது பாதிப்பைத் தீவிரமாக்கலாம்.

Eye drops

Avoid swimming பாதிப்பு உள்ள காலங்களில் நீச்சல் குளங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கவும், ஏனெனில் நீர் மூலமாகவும் கிருமிகள் பரவ வாய்ப்புள்ளது.

Avoid swimming

கண்கள் சிவந்து காணப்பட்டால் அல்லது பாதிப்பு இருந்தால், காண்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு சாதாரண கண்ணாடி அணியுங்கள்.

Eye glass

மெட்ராஸ் ஐ பாதிப்பு ஏற்பட்டால், அது குணமடையும் வரை பள்ளி, அலுவலகம் அல்லது பொது இடங்களுக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருப்பது மற்றவர்களுக்குப் பரவாமல் தடுக்க உதவும்.

Stay in home

பாதிப்பு ஏற்பட்டவர்கள் கருப்பு கண்ணாடி அணிவது, கண்கள் கூசுவதைத் தடுப்பதோடு மட்டுமல்லாமல், மற்றவர்களுக்குப் பரவும் வாய்ப்பையும் குறைக்கும்.

Black glass

மெட்ராஸ் ஐ பாதிப்பு உள்ளவர்களிடமிருந்து சற்று தள்ளியிருப்பது நல்லது. அவர்கள் பயன்படுத்திய பொருட்களைத் தொட நேர்ந்தால் உடனடியாகக் கைகளைச் சுத்தப்படுத்தவும்.

Wash hands

ஒருவேளை மெட்ராஸ் ஐ பாதிப்பு ஏற்பட்டால், சுத்தமான பஞ்சு அல்லது மென்மையான துணியை வெதுவெதுப்பான நீரில் நனைத்துக் கண்களைத் துடைக்கவும். ஒரு கண்ணைத் துடைத்த பஞ்சை மறு கண்ணுக்குப் பயன்படுத்த வேண்டாம்.

Cotton

நீங்கள் பயன்படுத்தும் கர்ச்சிப், டவல் (துண்டு), தலையணை உறை மற்றும் கண் மேக்கப் பொருட்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்கவும்.

Makeup products

உங்கள் கைகளால் கண்களைத் தேய்ப்பதோ அல்லது அடிக்கடி தொடுவதோ கூடாது. கிருமிகள் கைகள் மூலமாகவே கண்களுக்கு எளிதில் பரவுகின்றன.

No Eyes rubbing

வெளியே சென்று வந்தாலோ அல்லது பொது இடங்களைத் தொட்டாலோ, சோப்பு போட்டு கைகளை நன்கு கழுவுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

wash hand properly
International Women's Day
குடும்பத் தலைவி டூ சமூகத் தலைவி!