அறிந்த கோவில் அறியாத செய்தி...

ஆர்.பிரசன்னா

1/10. திருச்செந்தூர் முருகன் கோவிலில் சண்டிகேஸ்வரருக்கு தனி சன்னதி உண்டு. இங்கு முருகப்பெருமானுக்கு சாத்திய பூமாலையை சண்டிகேஸ்வரருக்கு அணிவிக்கிறார்கள்.

thiruchendur murugan temple | credit Reddit

2/10. காஞ்சிபுரம் விளக்கொளிப் பெருமாள் கோவிலில், பெருமாள் ஜோதி வடிவில் இருப்பதாக ஐதீகம்.

vilakoli Perumal Temple in Kanchipuram | credit pinterest

3/10. லால்குடியில் உள்ள சப்தரிஷீஸ்வரர் கோயிலில் வீணை வாசிக்கும் தட்சிணாமூர்த்தியை காணலாம்.

dhakshina moorthy | credit alaya thuligal

4/10. காஞ்சிபுரம் வைகுண்ட ப் பெருமாள் கோவிலில் பெருமாள், நின்றான், கிடந்தான், இருந்தான் என மூன்று நிலைகளில் காட்சி தருகிறார்.

Kanchipuram Vaikuntha Perumal | credit www.divyadesam.com

5/10. பொதுவாக காக வாகனத்தில் காட்சி தரும் சனி பகவான், ஆலங்குடி அபத்சகாயேஸ்வரர் கோயில் தலத்தில் கருட வாகனத்தில் அருள்பாலிக்கிறார். 

shani bhagavan | credit AI Image

6/10. சோளிங்கர் ஆஞ்சநேயர் சன்னதியில் ஆஞ்சநேயர் பெருமாளுக்கு உரிய சங்கு, சக்கரங்களை தம் கரங்களில் வைத்துக் கொண்டு, யோக ஆஞ்சநேயராகக் காட்சி தருகிறார் .

Sholingar Yoga Anjaneyar Temple | credit X.com

7/10. கோவை கோனியம்மன் கோவிலில் நவகிரகங்கள் ஒன்பது பேரும் தத்தம் மனைவியரை மடியில் அமர வைத்த நிலையில் காட்சி தருகிறார்கள்.

Koniamman Temple in Coimbatore | credit maalaimalar

8/10. திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரத்தில் உள்ள கனககிரீஸ்வரர் கோயிலில், மூலவருக்கு தினமும் வெந்நீரால் மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது.

Kanakagreeswarar temple | credit dinamalar

9/10. ராமநாதபுரம் அருகே உள்ள குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி கோயிலில் முருகன் 11 தலைகளும், 22 கரங்களும் உடைய விசித்திரத் திருக்கோலத்தில் காட்சி தருகிறார். 

Kundukarai Swaminatha Swami Temple | credit alaya thuligal

10/10. திருச்சூர் வடக்கு நாத சுவாமி கோவிலில், ராமர் சங்கு, சக்கரம் இவற்றுடன் 'கதை'யையும் கையில் பிடித்தபடி காட்சி தருகிறார்.

Thrissur vadakkumnathan Swamy Temple | credits maalaimalar
parents and children bonding
வயதான பெற்றோருடன் நீங்கள் சேர்க்க வேண்டிய 10 சொத்துக்கள்: பணம், நகையை விட இதுதான் முக்கியம்!