எஸ்.மாரிமுத்து
நம் தாயாகியபூமி நமது விருப்பங்கள் அனைத்தையும் நமக்கு அளிக்க தயாராக இருக்கிறாள். அவளை பாதுகாத்து போற்றுங்கள்.
நம் தந்தையாகிய கடவுள் சகலரிடமும் கருணை காட்டுகிறார். ஆகவே அவரை வணங்குங்கள்.
பெண்கள் சமையலுக்காக வீட்டில் அரிசி எடுக்கும்போது ஒரு கைப்பிடியை ஏழைகளுக்கு தர்மம் செய்ய எடுத்து வைக்க வேண்டும்
எடுத்து சொல்வதை விட மற்றவர் முன் எடுத்துக்காட்டாக வாழ்வேதே மதிப்பு மிக்கதாகும்.
வாழ்க்கையை லாப நஷ்ட கணக்கு பார்க்கும் வியாபாரமாக கருதுவது கூடாது. பிறர் நலனுக்காக உதவி செய்ய வேண்டும்.
நல்ல விஷயத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தால் மனம் பளிங்கு போல தூய்மையாக இருக்கும். காலையில் எழுந்தவுடன் இரண்டு நிமிடமாவது கடவுளை பத்தி உடன் வழிபடுங்கள்.
அனைவரும் அன்றாடம் அரை மணி நேரம் ஆவது மௌனமாக இருக்க பழகுவது அவசியம். எண்ணம் பேச்சு செயல் மூன்றாலும் பிறருக்கு நன்மை தரும் செயல்களில் மட்டும் ஈடுபட வேண்டும்.
பேசுவதில் கணக்காக இருந்தால் குடும்பத்தில் சண்டை சச்சரவு வராது. நம் சக்தியும் வீணாகாமல் இருக்கும். அன்பினால் பிறரை திருத்துவது தான் பெருமைக்குரியது. அதுவே நிலைத்த பலன் அளிக்கும்.
கோவத்தால் பிறருக்கு மட்டும் இல்லாமல் நமக்கும் தீமையே உண்டாகிறது. அலட்சியத்துடன் பணியாற்றுவது கூடாது. யாரையும் இழிவாக கருதுவதும் கூடாது.
உயிர்கள் மீது அன்பு காட்டுங்கள். செடிக்கு நீர் விடுவதும் விலங்கிற்கு உணவு அளிப்பதும் சிறந்த தர்மம். தானத்தில் சிறந்தது அன்னதானம். இதன் மூலம் மட்டுமே ஒரு மனிதனை திருப்தி படுத்த முடியும்.
எதிர்பார்ப்புடன் பக்தியில் ஈடுபட்டால் அது வியாபாரம் ஆகிவிடும். பாவத்தை கணப்பொழுதில் போக்கும் சக்தி கடவுளின் திருநாமத்திற்கு மட்டுமே இருக்கிறது.
நல்ல விஷயங்களை நாளை என்று காலம் தாழ்த்தக்கூடாது. அவற்றை செய்து முடிக்க இன்றேநல்ல நாள். எல்லாரும் இதயங்களையும் நட்பால் வெல்லுங்கள். பிறரையும் தன்னை போல நோக்குங்கள் பிறருக்கு உபதேசம் செய்யும் முன் நமக்கு தகுதி இருக்கிறதா? என்று ஒரு கணம் யோசிப்பது நல்லது.
புல்லை கூட படைக்கும் ஆற்றல் நம்மிடம் இல்லை. அதனால் நான் என்னும் ஆணவம் கூடாது. மனமே கடவுளின் இருப்பிடம். அதை தூய்மையாக வைத்திருப்பது நம் கடமை.
பிறர் நம்மை துன்பப்படுத்தும் போது அதை பொறுப்பது மனிதத் தன்மை. மறந்து விடுவது தெய்வத்தன்மை. பிறர் துன்பப்படும்போது பணம், உடல் உழைப்பு, வாக்கு ஆகியவற்றால் நம்மால் முடிந்த உதவியை செய்வது நம் கடமை.
நாம் நலமோடு வாழ்வதோடு மற்றவரும் நலமாக வாழ நினைப்பவனே உத்தம குணம் கொண்டவன்.