நான்சி மலர்
மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து வழிப்பட்டால், சகல சௌபாக்கியமும், காரிய சித்தியும் தருவார். தடைகளை நீக்கி, வாழ்க்கையில் நேர்மறை ஆற்றலைக் கொண்டு வருவார்.
குங்குமத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால், செவ்வாய் தோஷம் நீங்கும். குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். வெற்றியை தருவார்.
புற்றுமண்ணில் பிள்ளையார் பிடித்து வைத்து வழிப்பட்டு வர நோய்கள் அகலும், விவசாயம் செழிக்கும், செழிப்பை ஈர்க்கும், தடைகளை நீக்கும், நேர்மறை ஆற்றலைக் கொண்டுவரும்.
வெல்லத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வழிப்பட்டு வர உடலில் உள்ளேயும், வெளியேயும் உள்ள கட்டிகள் கரையும். மேலும் வாழ்வில் வளம் அடைவர்.
உப்பினால் பிள்ளையார் பிடித்து வைத்து வழிப்பட எதிரிகளின் தொல்லை நீங்கும். எதிரிகளை விரட்டுவார். தூய்மை மற்றும் பாதுகாப்பின் சின்னமாக கருதப்படுகிறது.
வெள்ளெருக்கில் பிள்ளையார் செய்து வழிப்பட்டால் பில்லி, சூன்யம், ஏவலை விரட்டுவார். செல்வ செழிப்பு, அறிவுசார் வளர்ச்சி, மற்றும் குடும்ப ஒற்றுமை பெருவார்கள்.
சாணத்தில் பிள்ளையார் பிடித்து வழிப்பட்டால் நேர்மறை ஆற்றல் தந்து சகல தோஷங்களும் நீங்கி வீட்டில் சுபநிகழ்ச்சி நடைப்பெற வழிவகுக்கும்.
வாழைப்பழத்தில் பிள்ளையார் பிடித்து வழிப்பட்டால் வம்ச விருத்தி உண்டாகும். வாழ்க்கையில் தடைகளை நீக்கி, செழிப்பை அதிகரிக்கும்.
வெண்ணெய்யில் பிள்ளையார் செய்து வழிப்பட்டால் தீராத கடன் தொல்லை தீரும். தடைகளை நீக்கி, நேர்மறை ஆற்றலை மேம்படுத்தி, ஆன்மீக வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
விபூதியில் பிள்ளையார் பிடித்து வழிப்பட்டு வர உடலில் ஏற்படும் உஷ்ண நோய்கள் தீரும். செல்வத்தை அதிகரிக்கும். ஆன்மீக வளர்ச்சியை ஊக்குவித்து நல்வாழ்வை அளிக்கும்.