இந்திரா கோபாலன்
அல்லிப்பூ: வைத்து பூஜை செய்தால் செல்வம் பெருகும்.
பூவரசம் வைத்து பூஜை செய்ய உடல் நலம் காக்கும்.
வாடாமல்லி மரண பயத்தை போக்கும்.
மல்லிகை வைத்து பூஜைசெய்ய குடும்பத்தில் அமைதி ஏற்படும்.
செம்பருத்தி ஆத்ம பலனை கொடுக்கும். நோயற்ற வாழ்வு தரும்.
அரளிப்பூ கடனைத்தீர்க்கும். முருகன் வழிபாட்டுக்கு உகந்த மலர்.
ரோஜாப்பூ குடும்ப ஒற்றுமையை ஏற்படுத்தும்.
நந்தியாவட்டை குழந்தைப்பேறு தரும். சிவபெருமானுக்கு உகந்த மலர். சரஸ்வதிக்கும் உகந்த மலையாகும். இந்த நந்தியாவட்டையை பைரவருக்குப் பயன்படுத்தக் கூடாது.
நீலநிறச் சங்குப்பூ மகாவிஷ்ணுவின் அருள் பெற்றுத் தரும். மேலும் ஆரஞ்சு சிவப்பு மலர்கள், துளசி, தாமரை போன்றவை மகாவிஷ்ணுவுக்கு உரியதாகும்.
நித்தியகல்யாணி மகாலக்ஷ்மியின் அருளைப் பெற்றுத்தரும்.
தங்க அரளி குருவின் அருளையும், திருமணத்தடையையும் போக்கும்.
பவளமல்லி பக்தியின் ஆர்வத்தைத் பெறுக்கும்.
மனோரஞ்சிதம் தெளிவான மனதைத்தரும்.
செந்தாமரை அறிவு பணம் ஆகியவற்றில் வளர்ச்சியைத் தரும்.