வாழ்வினைச் செம்மையாக்கும் வாரியார் சுவாமிகளின் வாக்கு!

ஆர்.வி.பதி

மகிழ்ச்சி என்பது செல்வத்தின் மிகுதியாலோ பெரிய மாளிகையாலோ உண்டாவதில்லை. ஏசி அறையில் இருக்கும் ஒருவன் மனக்கொதிப்புடன் இருப்பான்.  வெயிலில் விறகு பிளப்பவன் மனம் குளிர்ந்து  இருப்பான். கோடீசுவரன் முகத்தில் கவலை நிழல் படிந்திருக்கும். ஏழையின் முகத்தில் மகிழ்ச்சி ஒளி படர்ந்திருக்கும்.

Variyar | Imge Credit: variyarswamigal

மனிதனை உயர்த்துவது பணமன்று. பதவியன்று.  அறிவு ஒன்றுதான் மனிதனை உயர்த்தும்.

Variyar | Imge Credit: variyarswamigal

பொறுமை கடலினும் பெரியது. பொறுமையே புகழை வளர்க்கும், புண்ணியத்தை வளர்க்கும். உலகம் அழிந்தாலும் பொறுமை மிக்கவர் புகழ் அழியாது.

Variyar | Imge Credit: internet Archieve

சத்தியம் எனும் தாய். ஞானம் எனும் தந்தை. தருமம் எனும் சகோதரன். கருணை எனும் நண்பன். சாந்தி எனும் மனைவி. பொறுமை எனும் புதல்வன். இவர்களே நமக்கு உகந்த உறவினர்களாவர்.

Variyar | Imge Credit: X

ஆறு தரம் பூமியை வலம் வருவதாலும், பதினாயிரம் தடவை காசியில் குளிப்பதாலும் பலநூறு தடவை சேது ஸ்நானம் செய்வதாலும் கிடைக்கும் புண்ணியம் தாயை ஒருதரம் பக்திப்பூர்வமாக வணங்கினாலே கிடைக்கும்.

Variyar | Imge Credit: மின்கைதடி

விளக்கு நமக்கு எத்தனை வண்ணமாக உதவி செய்கின்றது என்பதை நாம் அது இல்லாத போதுதான் உணர முடியும். தாய் நம்மை எப்படியெல்லாம்  வளர்க்கின்றாள் என்பதை தாய் இல்லாத போதுதானே உணர முடிகிறது.  

Variyar | Imge CRedit: Akkinikkunchu

நாம் எந்த பாவத்தைச் செய்தாலும் தெய்வம் மன்னிக்கும். நன்றி மறப்பது எனும் பாவத்தை தெய்வம் ஒருபோதும் மன்னிக்காது.

Variyar | Imge Credit: Youtube

ஒரு வியாபாரி கடையை மூடும் போது வரவு செலவு கணக்கைப் பார்த்து இருப்புத் திட்டம் கட்டுவது போல நீ கண்ணை மூடி உறங்கும் முன் நீ செய்த புண்ணிய பாவங்களை நினைத்துப் பார்த்து புண்ணியந்தான் இருப்புத் திட்டம் எனக்கொள்.

Variyar | Imge Credit: Wordpress.com

உன்னை யாராவது புகழும் போது மகிழ்ச்சி அடையாதே. அதுபோல் உன்னை இகழும் போதும் கவலை அடையாதே. புகழையும் இகழையும் சமமாகக் கருது. அதனால் உன் மனது அமைதியாக இருக்கும்.

Variyar | Imge Credit: Mediyaan

நாம் செய்த நல்வினை தீவினை ஒன்று ஆயிரமாகப் பெருகி வரும். வயலில் இட்ட விதை ஒன்று பலவாக வருவது போல வினைகளும் பலமடங்கு வளர்ந்து வரும்.

Variyar | Imge Credit: Vikatan

ஒரு மனிதனோடு பழகும் போது அளந்து பழக வேண்டும். பால் வாங்கும் போதும் துணி எடுக்கும் போதும் அளந்துதானே வாங்குகிறோம். அதுபோல் யாரிடம் பழகினாலும் அளந்து பழகாவிட்டால் துயரம் வந்து சேரும்.

Variyar | Imge Credit: Routemybook

பகை தொலைவில் இருக்கலாம். அடுத்த வீட்டில் எதிர் வீட்டில் இருக்கக் கூடாது. இருந்தால் அது நமக்கு அஷ்டமத்து சனி. மிகுந்த ஆபத்தைத் தரும்.

Variyar | Imge Credit: Aandhai reporter.com

சுகமாக வாழும் போதே துக்கத்தையும் பழகிக் கொள்.  ஏனென்றால் வாழ்வும் தாழ்வும் மனிதனுக்கு மாறி மாறி வரும்.

Variyar | Imge Credit: மின்கைதடி

பறவைகளுக்கு இரு சிறகுகள். மனிதனுக்கு இரு கைகள் இரு கால்கள் இரு கண்கள், புகைவண்டிக்கு இரு தண்டவாளங்கள் இருப்பது போல மாணவர்களுக்கு இரு குணங்கள் இருக்க வேண்டும்.  ஒன்று அடக்கம். மற்றொன்று குருபக்தி. இந்த இரு குணங்கள் உள்ள மாணவன்தான் முன்னேற்றமடைவான்.

Variyar | Imge Credit: Wordpress.com

மூட்டைபூச்சியைப் போல பிறரைத் துன்புறுத்தி வாழக்கூடாது. கரையான்களைப் போல பிறர் பொருளை நாசப்படுத்தி வாழக்கூடாது. தேனீயைப் போலவும் எறும்பைப் போலவும் உழைத்து உண்ணுவதே அமைதியான வாழ்க்கையாகும்.

Variyar | Imge Credit: Vikatan
Plato | Imge Credit: Pinterest
Plato's Quotes: தத்துவஞானி பிளேட்டோவின் பொன்மொழிகள்!