நான்சி மலர்
மாணிக்கக் கல் (Ruby stone) நவகிரகங்களில் முதன்மையான சூரிய பகவானின் அம்சமாகக் கருதப்படுகிறது. பெண்கள் இந்த கல்லை அணிவதால் கிடைக்கும் 10 முக்கிய நன்மைகள் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
மனக்குழப்பத்தில் இருக்கும் பெண்களுக்கு தெளிவான சிந்தனையை வழங்கி, சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்க இது வழிகாட்டும்.
பெண்களுக்கு வயிற்று உபாதைகள் மற்றும் செரிமானக் கோளாறுகளைக் குறைக்க மாணிக்கம் உதவும்.
மாணிக்கம் அணிபவரைச் சுற்றி ஒரு பாதுகாப்பு வளையத்தை உருவாக்குகிறது. இது பொறாமை, கண் திருஷ்டி மற்றும் எதிர்மறை சக்திகளிடமிருந்து பெண்களைக் பாதுகாக்கும்.
வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் உரிய அங்கீகாரமும், உயர் பதவிகளும் கிடைக்க உதவும்.
சூரியன் கண் மற்றும் எலும்புகளுக்கு காரகர். எனவே, மாணிக்கம் அணிவது பெண்களின் கண்பார்வைத் திறனை மேம்படுத்தவும், எலும்புகள் வலுவடையவும் உதவும்.
மாணிக்கம் அணிவதால் தொழிலில் லாபமும், சேமிப்பும், குடும்பத்தின் பொருளாதார நிலையும் வலுவடையும்.
எதிர்மறை எண்ணங்களை நீக்கி, மனதிற்கு அமைதியைத்தரும் ஆற்றல் இதற்கு உண்டு. எனவே, மன அழுத்தம் உள்ள பெண்களுக்கு இது ஒரு சிறந்த தீர்வாக அமையும்.
மாணிக்கம் இதயத்துடன் தொடர்புடையது. எனவே, இது பெண்களுக்கு இரத்த ஓட்டத்தை சீராக்கவும், இதயம் சம்பந்தப்பட்ட கோளாறுகளைத் தவிர்க்கவும் உதவுகிறது.
திருமணமான பெண்கள் மாணிக்கம் அணிவதால், குடும்பத்தில் நிலவும் தேவையற்ற சண்டைகள் நீங்கி, இல்லறம் இனிமையாகும்.
மாணிக்கம் சூரியனின் ஆதிக்கம் கொண்ட கல் என்பதால், இதை அணியும் பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். எந்த ஒரு செயலையும் துணிச்சலுடன் செய்யக்கூடிய தலைமைப்பண்பு உண்டாகும்.