அட! சுற்றுலாவில் இத்தனை வகைகளா?

ரா.வ.பாலகிருஷ்ணன்

சுற்றுலா என்றதும் பலரது விருப்பமாக இருப்பது குளிர்ச்சியாக இருக்கும் மலைப்பிரதேசங்கள்தான். சிலருக்கு நீர்வீழ்ச்சி பிடிக்கும்; சிலருக்கு கோயில்கள் பிடிக்கும்; சிலருக்கு காடுகள் பிடிக்கும்.

Tourism | Imge Credit: Pinterest

சுற்றுலாவில் பல வகைகள் உள்ளன. ஆம், பலரும் இதனைத் தெரிந்து கொள்ளமாலேயே சுற்றுலாவிற்கு சென்று வருகின்றனர். அந்தவகையில் சுற்றுலாவின் வகைகள் பற்றிப் பார்ப்போம்.

Tourism | Imge Credit: Pinterest

ஆன்மீகச் சுற்றுலா: கோயில்கள் மற்றும் புனித தலங்களை விரும்புபவர்கள் குடும்பத்துடன் ஆன்மீகச் சுற்றுலா சென்று, பல கோயில்களை கண்டு ரசிக்கலாம்.

Types of Tourism | Imge Credit: Pinterest

குழந்தைகள் மற்றும் முதியோர்கள் உடன் வந்தால், அவர்களுக்குத் தேவையானவற்றை முன்பே எடுத்து வைத்துக் கொள்வது நல்லது.

Types of Tourism | Imge Credit: Pinterest

இயற்கை சுற்றுலா: தாவரவியல் பூங்கா, பறவைகள் சரணாலயம், காடுகள் மற்றும் ட்ரெக்கிங் செல்வது போன்றவை இயற்கை சுற்றுலாவில் அடங்கும்‌.

Types of Tourism | Imge Credit: Pinterest

இந்தச் சுற்றுலாவிற்கு செல்பவர்கள் அதிக தூரம் நடக்க வேண்டியிருக்கும் என்பதால் அதற்கேற்ப உடல்நலத்துடன் இருப்பவர்கள் செல்வது நல்லது.

Types of Tourism | Imge Credit: Pinterest

வரலாற்றுச் சுற்றுலா: மன்னர்கள் வாழ்ந்த இடங்கள், வரலாற்றுப் பொக்கிஷங்கள், புராதனச் சின்னங்கள் மற்றும் தொல்லியல் ஆய்வு நடைபெறும் இடங்களுக்குச் செல்வது வரலாற்றுச் சுற்றுலாவாகும்.

Types of Tourism | Imge Credit: Pinterest

வரலாற்றை அறிந்து கொள்ளும் ஆர்வம் நிறைந்தவர்கள் இந்தச் சுற்றுலாவைத் தேர்வு செய்யலாம்.

Types of Tourism | Imge Credit: Pinterest

அனுபவச் சுற்றுலா: எகிப்து பிரமிடு, அண்டார்டிகா மற்றும் சஹாரா பாலைவனம் போன்ற பிரமிக்கத்தக்க இடங்களுக்கு சென்று வருவது அனுபவச் சுற்றுலா.

Types of Tourism | Imge Credit: Pinterest

பசுமைச் சுற்றுலா: பழம்பெருமை வாய்ந்த கிராமங்கள், விவசாயப் பண்ணைகள் மற்றும் மூத்த விவசாயிகளைச் சந்தித்து உரையாடுதல் பசுமைச் சுற்றுலாவில் அடங்கும்.

Types of Tourism | Imge Credit: Pinterest

குழந்தைகளுக்கு இப்போதிலிருந்தே விவசாயத்தின் அவசியத்தைச் சொல்லித்தர பசுமைச் சுற்றுலா செல்வது நல்ல பலனைத் தரும்.

Types of Tourism | Imge Credit: Pinterest

சாகச சுற்றுலா: இன்றைய இளைஞர்கள் பலரும் படகு ஓட்டுவது, ஆழ்கடலுக்குள் செல்வது, சாலையில் வாகனம் ஓட்டும் பந்தயம் மற்றும் மலை விளிம்பில் இருந்து பாரா கிளைடிங் செய்வது போன்ற சாகச சுற்றுலாவை விரும்புகின்றனர்.

Types of Tourism | Imge Credit: Pinterest

கடற்கரைச் சுற்றுலா: கடற்கரையில் பரிசல் சவாரி மற்றும் படகு சவாரி போன்றவற்றை மேற்கொள்ள செல்வது கடற்கரைச் சுற்றுலா. நீச்சல் தெரியாதவர்கள் இந்தச் சுற்றுலாவிற்கு செல்வதைத் தவிர்க்கலாம்‌.

Types of Tourism | Imge Credit: Pinterest

மாற்றுத்திறனாளிகளுக்கான சுற்றுலா: மாற்றுத் திறனாளிகளும் சுற்றுலா செல்ல ஆசைப்படுவதுண்டு. ஆனால், இவர்கள் தனியாக செல்வது நல்லதல்ல.

Types of Tourism | Imge Credit: Pinterest

இவர்களுக்கு ஏற்ற வசதிகள் இருக்கும் இடத்தை தேர்வு செய்து குடும்பத்துடன் செல்வது நல்லது.

Types of Tourism | Imge Credit: Pinterest
Varieties of Mangoes
இந்தியாவின் பிரபலமான 9 மாம்பழ வகைகள் - அடையாளம் காண்பது எப்படி?